செவ்வாய், 9 அக்டோபர், 2018

தமிழும் மலேசியத் தமிழரும் ! கவிஞர் இரா. இரவி.தமிழும் மலேசியத் தமிழரும் !

கவிஞர் இரா. இரவி.

தமிழை அழியாமல் காப்போர் மலேசியத் தமிழர்
தமிழ்ப்பற்று மிக்கவர்கள் தமிழைப் போற்றுபவர்கள்!

புலம்பெயர்ந்த வலிமிகுந்த வாழ்க்கையிலும்
பண்டைத் தமிழை என்றும் மறக்காத பண்பாளர்கள்!

தேனீயைப் போல உழைத்திடும் உழைப்பாளர்கள்
தீந்தமிழ் வளர்ந்திட நாளும் உதவுபவர்கள்!

மலேசிய நாட்டின் ஆட்சிமொழி நம் தமிழ்
மலேசியர்கள் மிகவும் மதிக்கும் மொழி தமிழ்!

தமிழறிஞர்கள் மலேசியாவிற்கு வருகை தந்தால்
தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்!

மலேசியத் தமிழர்கள் தந்த தமிழ்ச்சொற்கள்
மண்ணில் தமிழை வாழ்விக்கும் கொடைகள்!

உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடத்தியவர்கள்
உலகத் தமிழர்கள் தொடர்பான கண்காட்சிகள் நடத்தியவர்கள்!

மலேசியாவை கட்டி எழுப்பியவர்கள் தமிழர்கள்
மலேசியா தமிழர்களிடமிருந்து பிரிக்க முடியாதது தமிழ்!

இனஉணர்வுடன் தமிழ் உணர்வுடன் வாழ்வோர்
இனிய தமிழுக்கு மணிமகுடம் சூட்டியவர்கள்!

மலேசியாவின் அங்கமானது நம் சங்கத்தமிழ்
மலேசியத் தமிழர்கள் உயிருக்கு மேலாக தமிழை மதிப்பவர்கள்
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அழைப்பிதழ்

அழைப்பிதழ்