ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !



ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

குடிக்காதீர் அன்று
குடித்து விட்டு வாகனம் ஓட்டாதீர்
இன்று !

கிடைக்கின்றது வணிகருக்கு
கிடைக்கவில்லை உழவருக்கு 
இலாபம்  !

காவலர் நிற்குமிடங்களில்
அணியப்படுகிறது 
தலைக்கவசம் !

பேசுவதில்லை வணிக வளாகங்களில் 
பேசுகின்றனர்  எளியவர்களிடம் 
பேரம் !

நடுங்க வைத்தது 
சபல புத்திக்காரர்களை 
நானும்தான் இயக்கம் ( ME TOO  )

நடக்கவில்லை விபத்து
சுற்றுச்சுவரை உடைத்தும்  
விமானம் !

தாமாக வந்தால் நிலைக்கும் 
தானாக சேர்த்தால் நிலைக்காது 
புகழ் !

இறைத்திட ஊரும் கிணறு 
படித்திட வளரும் 
அறிவு !

விரும்பிச் செய்தால் 
வராது வெறுப்பு 
வேலை !

எழுத்தில் எழும் 
ஐயம் தீர்ப்பாள்
மனைவி !

ஆலயம் செல்லும் போராட்டம் 
அன்று நடந்ததால் கிடைத்தது 
அனைவருக்கும் வாய்ப்பு !

அரசியலாக்கி வருகின்றனர் 
கேரளத்தில் 
ஐயப்பனை !

கருத்துகள்