ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !



ஹைக்கூ !    கவிஞர் இரா .இரவி   !

ஏற ஏற ஏறுகிறது
கோபம் மக்களுக்கு
பெட்ரோல் விலை !

விலை அதிகரிக்க
அதிகரித்தது இதயத்துடிப்பு
பெட்ரோல் !

விலங்கிலும்   கீழாக
மனிதர்கள்
பாலியல் குற்றம் !

ஊழலை ஒழிக்க வேண்டிய
காவல் உயர் அலுவலர்கள்
ஊழல் !

சோதனை மேல் சோதனை
காவல் உயர் அலுவலர்கள்
இல்லங்களில் !

தாங்கமுடியவில்லை
உரிமையாளர்கள்
விளம்பரத் தொல்லை !

கோடிகள் கொள்ளை
கண்டுபிடித்தபின்னும்
தொடர்கின்றனர் !

காவலர் வரும்முன்
வந்தது
அவர் தொந்தி !

காவலர் இருந்தால்
வேறுவழி செல்லல்
தலைக்கவசமின்றி !

கற்காலம் மட்டுமல்ல
கணினி காலத்திலும்
வரவேற்க மலர்கள் !

ஐவகை நிலத்தில்
வாழ்ந்த தமிழன்
ஐயத்தில் வாழ்கிறான் !

தண்டனைக்காலம் முடிந்தும்
விடுவிக்க யோசனை
மாபெரும் அநீதி !

இந்தியாவின்
பெரிய வணிகர்
முற்றும் துறந்த சாமியார் !

தனிநபரின் குற்றம்
சாதியின் குற்றமாக்குதல்
பெருங்குற்றம் !

அனைத்திற்கும்
தீர்வு சொல்லும்
திருக்குறள் !

மன்னர் காலம் மட்டுமல்ல
இன்றும் தொடர்கின்றது
உடன்பிறப்பு யுத்தம் !

கருத்துகள்