சனி, 4 ஆகஸ்ட், 2018

தாய்ப்பால் வாரம்! கவிஞர் இரா. இரவி


தாய்ப்பால் வாரம்!
கவிஞர் இரா. இரவி
அன்னை வழங்கிடும் அமுதம்
அன்புக் குழந்தை வளர்ந்திட வரம்!
ஊட்டச்சத்து ஒருங்கிணைந்தது தாய்ப்பால்
ஒவ்வொரு குழந்தைக்கும் தேவை தாய்ப்பால்!
வேண்டவே வேண்டாம் புட்டிப்பால்
வேறு வழியின்றி மட்டும் தரலாம் புட்டிப்பால்!
தாய் சேய் நலம் காக்கும் தாய்ப்பால்
தரணி முழுவதும் வழங்கிடும் தாய்ப்பால்!
இளமை போய்விடும் என்பது மூடத்தனம்
இளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மூலதனம்!
நோய்களைத் தாக்கும் தாய்ப்பால்
நோஞ்சானுக்குப் பலம் தரும் தாய்ப்பால்!
அன்பு கலந்திடும் தாய்ப்பால்
அன்னையின் பாசமளிப்பு தாய்ப்பால்!
இணையில்லாத திரவம் தாய்ப்பால்!
செடி வளர நீர் ஊற்ற வேண்டும்
கொடி வளர  கொம்பு ஊன்ற வேண்டும்!
குழந்தை உயிர்வாழ வேண்டும் தாய்ப்பால்
குழந்தைக்கு பலம் சேர்க்கும் தாய்ப்பால்!
தாய்ப்பாலுக்கு இணை தாய்ப்பால் மட்டுமே
தாய்ப்பாலின் உன்னதம் உணர்ந்து ஊட்டுவோம்!

-- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு  விருது