தமிழ்நாடு அதை நாடு! கவிஞர் இரா. இரவி

தமிழ்நாடு அதை நாடு!
கவிஞர் இரா. இரவி
இந்தியாவிலேயே அரசுக்கு வருவாய் தருவதில் முதலிடம்!
இந்தியர்கள் மனதினில் தமிழ்கம் பெறுகின்றது முதலிடம்!
கலைஅம்சம் மிக்க கோவில்கள் நிறைந்த தமிழகம்
கண்கவர் சிலைகள் எங்கும் நிறைந்த தமிழகம்!
வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடக்கும் தமிழகம்!
வந்தாரை எல்லாம் வளமாக வாழ்விக்கும் தமிழகம்!
உலகப்புகழ் சல்லிக்கட்டு நடக்கும் நல்ல தமிழகம்
உலகம் முழுவதிலிருந்தும் பயணிகள் வரும் தமிழகம்!
கைத்தறி ஆடைகளில் முத்திரை பதிக்கும் தமிழகம்
கைவினைப் பொருட்களில் சாதனை படைக்கும் தமிழகம்!
உழவுத்தொழிலை உயிரென மதித்து நடக்கும் தமிழகம்
உழவுக்கும் உழவுமாட்டிற்கும் திருவிழா நடத்தும் தமிழகம்!
உலகின் முதல்மொழி தமிழ்மொழி ஒலிக்கும் தமிழகம்
உலகின் முதல்மனிதன் பிறந்து சிறந்த தமிழகம்!
ஊட்டி கொடைக்கானல் குளிர் நல்கும் தமிழகம்
ஒப்பற்ற அருவிகள் குற்றாலம் உள்ள தமிழகம்!
பல்லாயிரம் ஆண்டுகளாக உயிர்ப்புடன் உள்ள தமிழகம்
பண்பாட்டை உலகிற்கே கற்பித்து வரும் தமிழகம்!
காகித உற்பத்தியில் சாதித்து வரும் தமிழகம்
கப்பல் போக்குவர்த்தும் சிறப்பாக நடக்கும் தமிழகம்!
பாரம்பரிய உணவுகளை இன்றும் படைக்கும் தமிழகம்
பார்த்தால் பசி தீரும் இயற்கைகள் உள்ள தமிழகம்!
கரகம் காவடி என கிராமியக் கலைகள் செழித்த தமிழகம்
கர்னாடக இசை மட்டுமன்றி தமிழிசையிலும் சிறந்த தமிழகம்!
பாரத நாட்டியத்திற்கு பாரதத்தின் முன்னோடி நம் தமிழகம்
பரதக்கலை மிக்க சிலைகளின் சிறப்பிடம் தமிழகம்!
விளையாட்டுத் துறையிலும் சாதனைகள் நிகழ்த்திடும் தமிழகம்
விதியை நம்பாமல் முயற்சியை நம்பிடும் தமிழகம்!
தரணி முழுவதும் தேடினாலும் ஈடில்லாத தமிழகம்
தரணிக்கே முன்மாதிரியாக விளங்கிடும் தமிழகம்!

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்