ஞாயிறு, 15 ஜூலை, 2018

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

கூட்டம் கூடுகிறது 
மதவாதிக்கும் உழல்வாதிக்கும் 
மக்களாக மக்கள் !

உலகப் பொதுமொழி 
காதலர்களுக்கு 
சைகை மொழி !

கவனம் வேண்டும் 
காற்றுக்காலம் 
நெருப்பிடம் !

அடிப்படை தீர்க்கும்முன்
ஆடம்பரம் எதற்கு ?
எட்டுவழிச்சாலை !

நல்ல நகைச்சுவை 
பசுமை அழிக்கும் சாலை
பெயரோ பசுமைச்சாலை !

வேண்டாம்  ஆராய்ச்சி 
இவர் என்னசாதி 
பேணுங்கள் மனிதம் !

தொற்றுநோயானது 
அரசியல்வாதிகளுக்கு 
ஊழல்  !

காத்திருப்பு 
எரிச்சல் நீக்கியது 
அலைபேசி !

மாவட்ட நீதிமன்றம் உயர் நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம் மறுசீராய்வு 
முடிந்தது வாழ்நாள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி !

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி ! உனக்காக  நான் எனக்காக நீ  உயிர் உள்ள வரை பிரியோம் ! உடல் இரண்டு உயிர் ஒன்...