கவிச்சுவை! நூல் ஆசிரியர் கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை கவிபாரதி மு. வாசுகி! மேலூர்!




கவிச்சுவை!

 நூல் ஆசிரியர் கவிஞர் இரா. இரவி !
 
நூல் மதிப்புரை கவிபாரதி   மு. வாசுகி!
 மேலூர்!


வானதி பதிப்பகம் 
23.தினதயாளு தெரு 
தியாகராயர் நகர் 
சென்னை.600 017. 
பக்கம்186 விலை ரூபாய்120 மட்டும் 
பேச 044-24342810/24310769. 
முக்கனிகளின் நடுவே
முப்பாலின் நாயகர் – இதுவே
முன்பக்க அட்டையின்
முழு அழகு!
முத்தமிழ்க்காவலர் விருதாளரும்
வித்தகக் கவிஞரும்
பத்தாதென்று
நல்லாசிரியர் விருது பெற்ற கோவிந்தராஜூ ஐயாவும்
நற்சிறப்பு வரிகளும்
புன்சிரிப்பு புகைப்படமும் கொண்டதே
பின்பக்க அட்டையின் பேரழகு!

நூலை விரித்துப் பார்த்தால்
படைத்த தலைப்புகள்
பன்மடங்கு அழகோ அழகு!

நூலுக்கு ஏற்ற தலைப்பா? தலைப்புக்கு ஏற்ற நூலா? என
பட்டிமன்றம் நடத்துகிறது மனது!
அத்தனை தலைப்புகளும் மிக அருமை!

எத்தனையோ கவிஞர்கள் கவிதைக்கேற்ற தலைப்பு வைக்க முடியாமல்  தவிப்பதைப் பார்த்திருக்கின்றேன், உணர்ந்திருக்கின்றேன்.
தலைப்புகள் நம் வாசிப்பின் ஆர்வத்தை அதிகரிக்கும் ஆற்றல் பெற்றவையென்பதை எவராலும் மறுக்க முடியாத உண்மை!
எனவே, தலைப்புகள் இந்நூலுக்கு மேலும் அழகு சேர்த்திருக்கின்றது.

சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் படிக்கும் வகையில் எளியமுறையில் உள்ளது.

பெண்ணால் சிறப்பானது பிரபஞ்சம் என்ற தலைப்புக் கவிதையில்,

ரத்தத்தில் ஊறி விட்ட ஆணாதிக்க சிந்தனைகளை
ரத்து செய்துவிட்டு, மதியுங்கள் பெண்களை!

என்ற வரிகள் மிக அழகு வாசிக்கும் பெண்ணினத்துக்கு பெருமைப்பட வைக்கும் சிந்தனை வரிகள்!

ஆக்ஸ்போர்டில் பிறந்த ஆச்சரியம் என்ற தலைப்பில் ஸ்டீபன் ஹாக்கிங் பற்றி எழுதுகையில்,

உடலை விட உயர்ந்தது மனம் என மெய்ப்பித்தவர்
உடல் நலமின்றியே உலக சாதனை நிகழ்த்தியவர் !

என்ற வரிகள் ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களுக்கு கிரீடத்தையும், இன்றைய சோம்பேறிகளுக்கு சவுக்கடியும் ஒரே நேரத்தில் வழங்கியிருக்கிறது.

மனத்திற்கிட்ட கட்டளைகள் தலைப்புக் கவிதையில்,

நாளும் நல்லதையே எப்போதும் நினைக்க வேண்டும்!
நாள் என்ற அகந்தை வராதிருக்க வேண்டும்!

என்ற வரிகள் நற்சிந்தனை வளர்க்க கவிஞர் பாடுபடுவதை எடுத்துரைக்கின்றது.

நூல் முழுவதும் நாட்டுப்பற்று, மொழிப்பற்று, பெண்விடுதலை பற்றிய கவிதைகள் நிரம்பி வழிகின்றது.

கவிஞரின் சமுதாய நோக்கம் பாராட்டுக்குரியது கவிச்சுவை!
எழுத்துச் சேவை!

உங்கள் இயக்கம் தான்
     இமயத்தை எளிதாக்குகிறது
     இன்றும்!

கருத்துகள்