ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

கவிதைமணி சமூகக் குற்றம்! கவிஞர் இரா. இரவி

முகப்பு ஸ்பெஷல்ஸ் கவிதைமணி
சமூகக் குற்றம்! கவிஞர் இரா. இரவி
By கவிதைமணி | Published on : 22nd April 2018 02:37 PM | அ+அ அ- |
மாதா பிதா குரு தெய்வம் என்றனர்
மாதா பிதாவிற்கு அடுத்து குருவை வைத்தனர் !
தெய்வத்திற்கும் முன்பாக குருவை வைத்தனர்
தாய் தந்தைக்கு இணையானவர் ஆசிரியர் !
கற்றுக் கொடுக்க வேண்டிய பேராசிரியர்
கூட்டிக் கொடுக்க முயன்றது சமூகக்குற்றம்!
ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ்ப்பண்பாட்டை
உணராமல் சிதைத்த செயல் பெரிய குற்றம்!
ஒழுக்கம் கற்பிக்க வேண்டிய பேராசிரியரே
ஒழுக்கக் கேட்டிற்கு வழிவகுத்தது குற்றமே!
உலகப் பொதுமறையில் ஒப்பற்ற திருவள்ளுவர்
உயிருக்கு மேலாக ஒழுக்கத்தை சொன்னார் !
மாமா வேலை பார்க்க முனைவர் பட்டம் எதற்கு?
மடத்தனம் புரிந்த உனக்கு பட்டம் பதவி எதற்கு ?
முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டியவர் !
வேறுமாதிரியாக நடந்து கொண்டது குற்றமே!
தவறு செய்ய நினைக்கும் அனைவருக்கும் !
தரும் தண்டனை பாடமாக அமைய வேண்டும்!
தாய் செய்த குற்றத்திற்காக சமுதாயம் !
தவறே செய்யாத மகள்களையும் தப்பாகப் பார்க்கும்!
தரமாக நடந்து இருந்தால் இப்படி வீணாய்
தவிக்கும் நிலை வந்து இருக்குமா சிந்திப்பாயா ?
மகளாக நினைக்க வேண்டிய மாணவிகளை
மானம் கெட விலைமகளாக்க நினைத்தது குற்றமே!
மானம் கெட்டா மதிப்பெண்கள் பெற வேண்டும்
மானம் கெட்ட மதி கெட்ட பேராசிரியை!
படித்து உயர்நிலை பெற வேண்டும் என்றால் நன்று
படுத்து உயர்நிலை பெற வேண்டும் என்றது குற்றமே!
இரண்டு மகள்களுக்குத் தாயான பேராசிரியைக்கு
இருட்டு புத்தி குருட்டு புத்தி வந்தது குற்றமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு  விருது