திங்கள், 16 ஏப்ரல், 2018

இலண்டனில் தமிழ் திருமணங்கள் " நூல் வெளியீட்டு விழா சிறக்க வாழ்த்துக்கள் !இலண்டனில் தமிழ் திருமணங்கள் " நூல் வெளியீட்டு விழா சிறக்க வாழ்த்துக்கள்  !

கவிஞர் இரா .இரவி !
உதவி சுற்றுலா அலுவலர் 
தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை 
மதுரை .
.
 கலாநிதி பொன் பாலசுந்தரம் அவர்களின் "இலண்டனில் தமிழ் திருமணங்கள் " நூல் வெளியீட்டு விழா சிறக்க வாழ்த்துக்கள். கலாநிதி பொன் பாலசுந்தரம் அவர்கள் என்பதாக கடந்த இளைஞர் உலகம் சுற்றும் வாலிபர் ஓய்விற்கு ஒய்வு தந்து விட்டு ஓய்வின்றி உழைத்து வருபவர் .

சிவயோகம் என்ற வரலாற்று சிறப்பு மிக்க மலருக்கு ஆசிரியராக இருந்து வெளிக் கொண்டு வந்தவர். சிவயோகம் போன்ற ஒரு மலரை இனி வேறு யாராலும் கொண்டு வர முடியாது .அவரது "  MASTER PIECE " என்றே சொல்ல வேண்டும் .அதற்குப்பின் சில மலர்கள் தொகுத்தார்கள் ஆனால் சிவயோகம் அளவிற்கு வரவில்லை .அந்த மலரை உலகமே பாராட்டியது .
.
மதுரை ஆதினம் தொடங்கி தமிழ்த் தேனீ இரா .மோகன், கலைமாமணி கு . ஞானசம்பந்தன் வரை அனைவரும் பாராட்டினார்கள் .கட்டுரைகள் வாங்கி அனுப்பி உதவிய என்னை மறக்காமல் மலரில் ஒரு பக்கம் ஒதுக்கி நன்றி பாராட்டினார்.  தமிழன்னைக்கு ஆன்மிக உலகிற்கு வழங்கிய மகுடம்தான் சிவயோகம் மலர் .

புலம் பெயர்ந்த வலி மிகுந்த வாழ்விலும் ,முதுமையிலும் சோர்ந்து விடாமல் .முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு 
இ .ஆ .ப அவர்கள் சொல்வது போலவே" எப்போதும் இயங்கிக் கொண்டே இருப்பவர்". .தள்ளாத வயதிலும் தளராத சிங்கம் .

 கலாநிதி பொன் பாலசுந்தரம்  அவர்களும் ஐ .தி .சம்பந்தன் அவர்களும் இரட்டைக்குழல் துப்பாக்கி என்றே சொல்ல வேண்டும். இணை பிரியாத உற்ற தோழர்கள் .இருவரும் இணைந்து சுடரொளி வெளியீட்டுக் கழகம் மூலம் உலக அளவில் இரண்டு முறை கவிதை போட்டிகள் நடத்தி தமிழ்ப்பணி செய்தவர்கள் .ஆயிரக் கணக்கில் பரிசுகள் வழங்கினார்கள். கவிதைகளைத் தொகுத்து நூல்களாகவும் வெளியிட்டனர். இப்போட்டிகளில் என் கவிதைக்கும் பரிசு கிடைத்தால்தான் இவர்களின் தொடர்பும், நட்பும் கிடைத்தது.
 
சென்னையில் நடந்த ஐ .தி .சம்பந்தன் இல்ல திருமணத்தை  கலாநிதி பொன் பாலசுந்தரம் அவர்கள் முன் நின்று நடத்தி வைத்தார்கள் .ஒரு இளைஞனைப் போல பம்பரமாகச் சுழன்று பணி ஆற்றினார்கள். திருமணத்திற்கு நானும் சென்று இருந்தேன் .

இலண்டனில் இருந்து வெளிவரும் புதினம் மாத இதழின்  ஆசிரியர் இராசகோபால் அவர்கள் கலாநிதி பொன் பாலசுந்தரம் அவர்களின்  சீடர் .மதுரை வந்து இருந்தபோது  இராசகோபால் அவர்கள்  என்னிடம் கூறினார் .இலங்கையில் இருந்த போது எனக்கு பத்திரிக்கைத் தொழில் கற்றுக் கொடுத்த ஆசான்  கலாநிதி பொன் பாலசுந்தரம் என்றார் .இப்படி பல சீடர்களை உருவாக்கிய குரு.  இராசகோபால் அவர்கள் புதினம் மாத  இதழை மின் அஞ்சலில் மாதா மாதம் அனுப்பி வருகிறார்கள் .நான் அதனை உலகம் முழுவதும் உள்ள மின் அஞ்சல் குழுவினருக்கு ,தமிழக கவிஞர்களுக்கு .எழுத்தாளர்களுக்கு  அனுப்பி வருகிறேன் .இப்பணிக்கும்  காரணம் கலாநிதி பொன் பாலசுந்தரம் அவர்கள்தான் .இவர்தான் எனக்கு தன் சீடர் இராசகோபால் அவர்களை அறிமுகம் செய்து வைத்தார்கள் 

கலாநிதி பொன் பாலசுந்தரம்  அவர்கள் எனக்கும் குருவாகி குடும்ப நண்பராகி அவர் மட்டுமல்ல அவரது மகள் மருமகன் கிருபா வரை அறிமுகம் செய்து வைத்து குடும்பமே ஐயாவின்  அன்பால் இணைந்துள்ளோம் .

கலாநிதி பொன் பாலசுந்தரம்  அவர்கள் தமிழத்தில் இருந்து வரும் தமிழ் அறிஞர்களை வரவேற்று உபசரிப்பது மட்டுமல்ல  தன் கையால் சமைத்தும் போடுகின்றார். மதுரை வந்து இருந்த பெருங்கவிக்கோ வா .மு .சேதுராமன் அவர்கள் சொன்னார்கள் ., கலாநிதி பொன் பாலசுந்தரம்  அவர்கள் "தன் கையால் மீன் குழம்பு சமைத்து சாப்பாடு போட்டு உபசரித்ததை மிகவும் பெருமையாக குறிப்பிட்டார்கள் .

உலகின் முதல் மொழி தமிழ் .உலகின் முதல் மனிதன் தமிழன் .இதை தமிழன் சொல்லவில்லை .அமெரிக்காவின் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள் .எனவே உலகில் தமிழன் இல்லாத நாடே இல்லை .உலகம் முழுவதும் பரந்து பறந்து  வாழும் தமிழன் தமிழின் தொன்மை காக்க வேண்டும் .தமிழ் பண்பாடு காக்க வேண்டும். 
கருவேப்பிலை  எங்கு வளர்ந்த போதும் அதன்  மணம் மாறுவதேயில்லை .அதுபோலவே உலகத் தமிழர்களும் எங்கு வாழ்ந்தபோதும் தமிழ் பாரம்பரியம் மாறாமல் நமது மரபு காத்து  வாழ வேண்டும் .அதற்கு வழி சொல்லும் நூல் இது .உலகத் தமிழர்கள் அனைவரின் இல்லத்திலும் இருக்க வேண்டிய நூல் இது . 

"இலண்டனில் தமிழ் திருமணங்கள் " நூல் வெளியீட்டு விழா சிறக்க வாழ்த்துக்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு  விருது