என்னவள்! கவிஞர் இரா. இரவி

என்னவள்!
கவிஞர் இரா. இரவி

சேலையணிந்த
கவிதை
என்னவள்!
மூளையின் மூலையில்
நிரந்தரமாய் வசிப்பவள்
என்னவள்!
சுடிதார் அணியும்
சொர்க்கம்
என்னவள்!
நடமாடும்
சிரபுஞ்சி
என்னவள்!
கால் முளைத்த
தாஜ்மகால்
என்னவள்!
நடந்து வரும்
பிருந்தாவனம்
என்னவள்!
நடமாடும்
நயாகரா
என்னவள்!
கூந்தல் உள்ள
குற்றாலம்
என்னவள்!
விழிகளால் பேசும்
விசித்திரம்
என்னவள்!
உலா வரும்
நூலகம்
என்னவள்!
இல்லை இப்போது
அன்னப்பறவை
எடுத்துக்காட்டு என்னவள்!
பலாவை மிஞ்சும்
இனியவள்
என்னவள்!
சிறகு முளைக்காத
வண்ணத்துபூச்சி
என்னவள்!
பசியை மறக்கடிக்கும்
பாவை அவள்
என்னவள்!
தேன் சிந்தும்
பூஞ்சோலை
என்னவள்!

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்