நிசப்த வெளியில் ! கவிஞர் இரா. இரவி !
நிசப்த வெளியில் !  கவிஞர் இரா. இரவி !


நிசப்த வெளியில் நீ அருகில் இருந்தால்
நான் காண்பேன் சொர்க்கத்தை மண்ணில்!

சப்தமின்றி மௌனராகம் இனிதே பாடலாம்
சந்தோசத்தில் உலகை மறந்து பறக்கலாம்!

இருவரையும் தவிர யாருமில்லாத இடத்தில்
இனிதே விழிகளால் பேசி மகிழலாம்!

உச்சரிப்புக்கு வேலை தராமல் மௌனமாக
உதடுகள் அசைக்காமல் உரையாடிடலாம்!

என் விழிகள் உரைப்பதை நீ உணர்வாய்
உன் விழிகள் உரைப்பதை நான் உணர்வேன்!

ஒலி மாசு இன்றி இன்புற்று இருக்கலாம்
ஒளி வந்தால் இருவரும் ரசித்து மகிழலாம்!

இரைச்சல் என்பதை அறியாது இருக்கலாம்
இனிய அமைதியை ரசித்து மகிழலாம்!

நிலவு வானிலிருந்து நம்மை ரசிக்கலாம்
நிலவை பூமியிலிருந்து நாமும் ரசிக்கலாம்!

ஆதியில் வாழ்ந்த ஆதாம் ஏவாள் போல
இருவர் மட்டுமே அவ்வுலகில் வாழ்வோம்!

சப்தங்களால்தான் பல யுத்தங்கள் வந்தன
நிசப்த யுத்தம் நாம் நடத்துவோம் வா!

.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !