அவசரப்பட்டு விட்டாய் அனிதா ! கவிஞர் இரா .இரவி !

அவசரப்பட்டு விட்டாய் அனிதா ! கவிஞர் இரா .இரவி !

தனி ஒரு பெண்ணாய் நீ போராடினாய் 
தலைநகரம் சென்று வழக்காடினாய் !

சமூக நீதி காக்க குரல் தந்தாய் 
சமுதாயத்தில் விழிப்புணர்வு விதைத்தாய் !

உச்ச நீதி மன்றம் கை விரித்த போது 
உன்னிடம் பணம் இருந்தால் !

மறு சீராய்வு மனு போட்டிருப்பாய் 
மனுவிற்கு நீதி கிடைத்து இருக்கும் !

சுமை தூக்கும் தொழிலாளியின் மகளானாய் 
சுமை மனச்சுமை தாங்காமல் மரித்தாய் !

தாயை  இழந்து வளர்ந்த காரணத்தால்தான் 
தன்னம்பிக்கை இழந்து விட்டாயோ ?

விலக்கு வரும் வரும் என்று சொல்லியே 
வீணடித்தனர் காலத்தை கல்வியை ! 

அரசியல்வாதிகளின் கபட நாடகத்திற்கு 
அப்பாவிப்பெண்   நீ பலியானாய் !

நம்ப வைத்து கழுத்தை அறுத்த கதையாக 
நம்ப வைத்து உன் கதையை முடித்தனர் ! 

அனிதாவின் மரணம் தற்கொலையல்ல 
அரசியல்வாதிகள் செய்த படுகொலை !

மக்களுக்காகாத்தான் சட்டம் என்பதை 
மாண்புமிகு நீதியரசர்கள் புரிந்திட வேண்டும் !

கோடிப்பணம்  கொட்டிக் கொடுத்தாலும் 
அனிதாவின்  உயிர் திரும்ப வருமா ?

ஏழை எளிய கிராமத்து மாணவர்களின் கனவை 
எட்டி உதைக்க ஏற்படுத்தப்பட்ட சதியே நீட் !

வாழவேண்டிய வஞ்சியை தற்கொலைக்குத்  தள்ளிய 
வஞ்சகர்கள் உணரவேண்டும் திருந்த வேண்டும் !

உயிர் காக்க மருத்துவர் ஆக விரும்பியவளின் 
உயிரைப்  பறித்த கொடியவர்கள் அரசியல்வாதிகள் !

அரசியல்வாதிகளே   உங்களின்  கீழ்த்தரமான 
அரசியல் விளையாட்டை இத்தோடு நிறுத்துங்கள் !

அவசரப்பட்டு விட்டாய் அனிதா வேதனை 
அனிதாவோடு முற்றுப்பெறட்டும் தற்கொலை !  
-- 

கருத்துகள்