ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 

நிலக்கரி வைரம் 
இரண்டும் 
மண்ணுக்கடியில் ! 

ஊரே பால் ஊற்றியது 
முடிவில் பார்த்தால் 
அனைத்தும் தண்ணீர் ! 

புதிய வீடு 
வரவில்லை தூக்கம் 
வாங்கிய கடன் ! 

பறக்க மறந்தன 
சிறகுகள் இருந்தும் 
சோதிடக் கிளிகள் ! 

இரும்புச் சங்கிலி இழுத்துத் தோற்றதால் 
சிறிய கயிறையும் இழுக்கவில்லை 
யானை ! 

கண்களை மூடியபோதும் 
களைப்பின்றிப் பயணம் 
குதிரை ! 

வாழ்வின் ஏற்றம் இறக்கம் 
கற்பிக்கும் விளையாட்டு 
பரமபதம் ! 

பகிர்தலை 
பயிற்றுவிக்கும் விளையாட்டு 
பல்லாங்குழி !

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !