திங்கள், 24 ஜூலை, 2017

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
ஹைக்கூ !   கவிஞர் இரா .இரவி ! 


பசுமை இலை 
வழங்கியது சிகப்பு 
மருதாணி ! 

விழுங்கியது 
கோடை விடுமுறையை 
இன்றைய கல்வி ! 

கறிக்கோழியாக 
மதிப்பெண்ணுக்காக 
மாணவன் ! 

தேர்வில் வெற்றி 
வாழ்வில் தோல்வி 
மாணவர்கள் ! 

உணர்த்தியது 
மழையின் வருகை 
இடி மின்னல் ! 

மரங்களை வெட்டி 
கட்டிய கட்டிடங்களில் 
செயற்கைச் செடிகள் ! 

இன்பம் துன்பம் 
உணர்த்தியது 
பிறை நிலவு ! 

வலைக்கட்டிக் காத்திருந்தது 
பூச்சிக்காக 
சிலந்தி ! 

ஏழைகளின் மலர் 
பணக்காரர்கள் மலரானது 
மல்லிகை ! 

இன்றைய மனிதர்கள் 
சத்து இன்றி 
இல்லை பழைய கஞ்சி ! 

தனியாகப் பேசுகின்றனர் 
இல்லத்தரசிகள் 
தொடர்களின் பாதிப்பு ! 

சேதாரத்தால் 
சேதரமானார்கள் 
வாடிக்கையாளர்கள் ! 

செய் கூலி இல்லை என்று 
சேர்த்தார்கள் 
செம்பொன் ! 

தள்ளுபடி என்று 
தள்ளுபடியானது 
நாணயம் ! 

நாங்கள்தான் தங்கம் 
எல்லோரும் சொல்கிறார்கள் 
தங்க வியாபாரிகள் ! 

வாங்கினால் அதிகம் 
விற்றால் குறைவு 
தங்கம் ! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அழைப்பிதழ்

அழைப்பிதழ்