பரியின் பார்வை! கவிஞர் இரா. இரவி !




பரியின் பார்வை!
கவிஞர் இரா. இரவி !
பரியின் பார்வை மறைக்கப்பட்ட காரணத்தால்
பரியின் கவனம் சிதறாமல் ஓடுகின்றது !

பரியின் பார்வை பரி ஓட்டுனர் வசம்
பார்வை சிதறாததால் கவனமும் சிதறுவதில்லை !

கண்கள் மூடாத குதிரையின் ஓட்டம்
ண்டபடி இருக்கும் ஒழுங்கு இருக்காது !

வேகத்தின் குறியீடாக உரைப்பது குதிரை
வேகத்தின் திறனை குதிரை வேகம் என்கின்றனர் !

குதிரை சவ்வாரி எல்லோருக்கும் சாத்தியமில்லை
குதிரையின் நுட்பம் அறிந்திருக்க வேண்டும் !

குதிரை பின்காலால் உதைத்து விட்டால்
களிம்பு தடவும் அளவிற்கு புண்ணாகி விடும் !

குதிரைக்கு இலக்கியத்தில் இனிய பெயர் பரி
குதிரை குத்துவது இல்லை கடிப்பதும் இல்லை

வேகமாக ஓடிடும் ஆற்றல் உள்ள போதும் !
வேறெதுவும் அசைவம் உண்பதே இல்லை

குதிரையை அடக்கி ஆள வீரம் வேண்டும் !
குதிரையிடம் பயிற்சியின்றி பயணம் முடியாது

மன்னர் காலத்தில் மட்டுமல்ல இன்றும் 
மண்ணில் உள்ளது குதிரைகள் படை !

பரியின் பார்வை மனிதர்கள் பெற்றால்
பயணத்தில் கவனச்சிதறல் இருக்கவே இருக்காது !

.

கருத்துகள்