ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 

படித்தவர்களும் 
ரேகை பதித்தனர் 
அலுவலகம் நுழைகையில் ! 

ஓரடி ஆத்திசூடி 
ஈரடி திருக்குறள் 
மூவடி ஹைக்கூ ! 

பெயரிலேயே 
திரு உடையது 
திருக்குறள் ! 

பெயரிலேயே 
திரு உடையவர் 
திருவள்ளுவர் ! 

மல்லிகைக்கு மட்டுமல்ல 
மாசற்ற அன்பிற்கும் 
மதுரை ! 

மனிதர்களை மட்டுமல்ல 
கணினிகளை தாக்குகின்றன 
கிருமிகள் ! 

அமைதி காக்கவும் 
கத்திச் சொன்னார் 
ஆசிரியர் ! 

வழியனுப்ப வந்தவர் 
உடன் பயணித்தார் 
புறப்பட்டது தொடரி ! 

இடுகாடு வேண்டாம் 
சுடுகாடு போதும் 
இடநெருக்கடி 

இறந்த பின்னும் 
வாழும் விழிகள் 
விழி தானம் ! 

வேண்டாம் ஏளனம் 
மானம் காத்தது 
மாற்றுத்திறனாளி ! 

திருந்தாத மக்கள் 
தெரிந்தே ஏமாறுகின்றனர் 
தனியார் நிதிநிறுவனம் 

மனிதனுக்கு 
அழகு 
மனிதநேயம் ! 

அடுக்குமாடியில் 
நெருக்கமாக வீடுகள் 
தூரமாக மனசுகள் !கருத்துகள்

பிரபலமான இடுகைகள்