புத்தகம் ! கவிஞர் இரா .இரவி

புத்தகம் ! கவிஞர் இரா .இரவி
மனிதனை மனிதனாக
வாழ வைப்பது
புத்தகம் !
மனிதனின் வளர்ச்சிக்கு
வித்திட்டது
புத்தகம் !
பண்பாடு வளர்த்து
பண்பைப் போதிப்பது
புத்தகம் !
அறிவியல் அறிவை
அகிலம் பரப்பியது
புத்தகம் !
பயனுள்ள கண்டுபிடிப்பு
வாழ்வின் பிடிப்பு
புத்தகம் !
புரட்சியாளனை
உருவாக்கியது
புத்தகம் !
அகிம்சைவாதியை
வளர்த்தது
புத்தகம் !
பகுத்தறிவுப் பகலவன்
ஒளிவீசக் காரணம்
புத்தகம் !
பேரறிஞர்
புகழ்ப் பெறக் காரணம்
புத்தகம் !
அகமும் புறமும்
சுத்தம் செய்வது
புத்தகம் !
அகம்பாவம் ஆணவம்
அகற்றுவது
புத்தகம் !
பணிவு கனிவு தெளிவு
வழங்குவது
புத்தகம் !
அறிவை விரிவு செய்து
அறியாமையை அகற்றுவது
புத்தகம் !

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்