ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ !   கவிஞர் இரா .இரவி !

நானே பெரியவன்
நினைக்கும்போதே
மிகச் சிறியவனாவாய் !

சிந்திச் சென்றது
குப்பையோடு மணத்தையும்
குப்பைவண்டி !

காசாக்கலாம்
குப்பையையும்
பெயர் எடுத்துவிட்டால் !

மணத்தோடு அவள் மனமும்
பரப்பியது
மலர்ந்த மலர் !

ஒளிப் பாய்ச்சியது
ஓடியது இருள்
விளக்கு !

நீண்ட பிரிவிக்குபின்
சந்திப்பு
கூடுதல் இன்பம் !

வெட்கப் பட வேண்டும்
வல்லரசுகள்
சோமாலியா சோகம் !

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்