கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு ! செந்தமிழைத் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்! கவிஞர் இரா .இரவி !கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு !

செந்தமிழைத் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்!

கவிஞர் இரா .இரவி !

செந்தமிழ் நாட்டில் நாளும் ஊடகத்தில் 
செந்தமிழ்க் கொலை நடப்பது முறையோ ?

ஊடகங்களின் தமிழ்க் கொலைக்கு கண்டனத்தை 
உடன் அனைவரும் பதிவு செய்து திருத்திடுவோம் !

நல்ல தமிழ் நாளும் பேசிடுவோம் 
நல்ல தமிழ் நாளும் எழுதிடுவோம் !

கொச்சைத் தமிழுக்கு முடிவு கட்டுவோம் 
பச்சைத் தமிழர்கள் முடிவு எடுத்திடுவோம் !

உலகின் முதன் மொழி தமிழ் உணர்ந்தது உலகம் 
உள்ளூர் தமிழர்கள் இன்னும்  உணரவில்லை  !

உலகின் முதல் மனிதன் தமிழன் என்பதை 
உலகம் அறிந்தது தமிழன் அறியவில்லை !
  
தாய் மொழிகளுக்கு எல்லாம்  தாய்மொழி 
தமிழ் மொழி என்பதை அறியவில்லை தமிழர் !

உலகப் பொதுமுறையை உலகிற்கு வழங்கிய 
உன்னத  மொழி ஒப்பற்ற தமிழ் மொழி   !           

தமிங்கில உரைக்குத் திரை இடுவோம் 
தமிழைத்  தமிழாகப் பேசி மகிழ்ந்திடுவோம் !

வடமொழி எழுத்துக்கள்  தமிழுக்கு வேண்டாம் 
வண்டமிழின் பெருமை என்றும் காத்திடுவோம் !

உலக மொழி ஆங்கிலத்திற்கும் மூலம் தமிழ் 
உலகம் முழுவதும் ஒலிக்கும் மொழி தமிழ் !


பாவேந்தர் கண்ட கனவுகளை   நனவாக்க 
பாரில் உள்ள தமிழர்கள் யாவரும் உழைப்போம் !

செந்தமிழைத் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்!
செந்தமிழன் அருமை பெருமை அறிந்திடல் வேண்டும் !

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்