உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண், தட்டச்சு செய்து pollachinasan@gmail.com மின் அஞ்சலுக்கு அனுப்பி உங்களது பெயரை பதிவு செய்து கொள்ளவும்

அயற் சொற்கள் என்றால் என்ன ? அயற்சொற்களைக்
கலக்காமல் தமிழைப் பேசுவது எப்படி ? தமிழில்
கலந்துள்ள அயற்சொற்கள் எவை ? அயற்சொற்களுக்கான
அகரமுதலி ஏதேனும் உள்ளனவா ? வேற்று மொழிச்
சொற்களைக் கலக்காமல் ஏன் பேசவேண்டும் ?


தமிழில் சொற்கள் இல்லையா ? அல்லது நுனிநாக்கில்
வேற்று மொழி பேசுவது பெருமை என்று கருதும்
போக்கு மக்களிடம் விதைக்கப்பட்டு அது வளர்ந்து
மரமாகி, தலைவிரித்து ஆடுகிறதா ? எது சரி ?


அந்த அந்த மொழியை அந்த அந்த மொழியின்
சொற்களைக் கொண்டு பேசுவதுதான் அந்த மொழியின்
வளர்ச்சிக்கும், ஆழ்ந்து, அகன்ற ஆய்வுக்கும் வழி
அமைக்கும் என்பதைத் தெரியாதவர்களா தமிழர்கள் ?


உலகம் முழுவதும் வாழ்ந்தாலும், தமிழ் தமிழ்தான்.


தமிழில் பேசும் பொழுது தான் அவர்கள் தமிழர்கள்,
இதற்குப் படி எங்காவது அமைக்கப்பட்டுள்ளனவா ?


பயிற்சியில் நல்ல தமிழ்ச் சொற்களை அடையாளம்
கண்டு அச்சொற்களைப் பேச முன்னெடுங்கள்.
உங்களோடு நான். மொழிவழி இணைவோம்.
வாழ்த்துகளுடன்


பொள்ளாச்சி நசன் - தமிழம்.வலை, தமிழம்.பண்பலை

உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண், தட்டச்சு செய்து
 pollachinasan@gmail.com மின் அஞ்சலுக்கு அனுப்பி
உங்களது பெயரை பதிவு செய்து கொள்ளவும்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்