அட்சய திரிதி ! கவிஞர் இரா .இரவி






அட்சய திரிதி  !                 கவிஞர் இரா .இரவி

பகல் கொள்ளை
ஆரம்பம்
அட்சய திரிதி  !

உழைக்காமல் உண்ணும் சோம்பேறி
சோதிடன் உளறல்
அட்சய திரிதி !

பெருகிட உயிரினமா  ?
தங்கம்
அட்சய திரிதி !

அடகில் மூழ்கியது
வாங்கிய தங்கம்
அட்சய திரிதி !

மூடநம்பிக்கையின் உச்சம்
ஏமாருவதே மிச்சம்
அட்சய திரிதி !

சோதிடன்  நகைவணிகன்
கூட்டுக் கொள்ளை
அட்சய திரிதி !

உலோகம் பெருகுமா ?
யோசிக்க வேண்டாமா ?
அட்சய திரிதி !

தங்கத்தின் ஆசை
தகர்த்திடுப் பெண்ணே
அட்சய திரிதி !

கொலை கொள்ளைப்  பெருகிடக்
காரணம் தங்கம்
அட்சய திரிதி !

குடும்பத்தின் நிம்மதி
கெடுப்பது
அட்சய திரிதி !

தங்கத்தின் விலை ஏற்றதிற்குக்
காரணம்
அட்சய திரிதி !

தரமற்றத்    தங்கம்
தரமென்று விற்கும்
அட்சய திரிதி !

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !