படம் உதவி ! மகிழ்நன் மறைக்காடு ! ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !படம் உதவி !    மகிழ்நன் மறைக்காடு !

ஹைக்கூ !    கவிஞர் இரா .இரவி !

கோடையின்  கொடுமை
விட்டுவைக்கவில்லை
புறாக்களையும் !

உயிர் வளர்கின்றது
ஒட்டி இருக்கும்
சிறு துளி அருந்தி !

தன் சதை தந்த
சிபி எங்கே
தண்ணீர் கொடு !

சீக்கிரம் குடி புறாவே
வருகிறான்
வேட்டைக்காரன் !

தவிக்கின்றது
காதலுக்குத் தூது போன புறா
தாகம் தணிக்க வழியின்றி !

கருத்துகள்