படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! 

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! போனது உழவர்களின் 
மானமன்று
ஆள்வோரின் மானம் ! 


கண்டுகொள்ளாதவர் 
கண்டுகொள்ள 
கவனம் ஈர்ப்பு !


யானை கட்டி போரடித்த
தமிழன் ஊழல்வாதிகளிடம்
போராடும் நிலை !


ஊரின் பசியாற்றிய   
வள்ளலார்களின்
பசிப் போக்க வழியில்லை  !


நடிகையாக இருந்திருந்தால் 
கிட்டியிருக்கும் வாய்ப்பு 
சந்திக்க !


வெளிநாடு சுற்றிடவே 
நேரம் போதவில்லை 
இவர்களை சந்திக்க ஏது நேரம் ?


தொழ வேண்டிய உழவர்களை 
அழ  வைத்தவர்கள் 
அழிவு உறுதி !
  
உலகே சிரிக்கிறது 
இந்தியாவின் 
நிர்வாகச் சீர்கேடு கண்டு !

ஏவுகணை ஏவுவதை 
நிறுத்தி விட்டு 
எம் உழவர்களைக்  கவனி !

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்