திங்கள், 24 ஏப்ரல், 2017

23.4.2017அன்று நடைபெற்ற பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தின் ,வள்ளலார்,பாரதியார்,காமராசர்,அறக்கட்டளைகளின் சொற்பொழிவு

23.4.2017அன்று நடைபெற்ற பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தின் ,வள்ளலார்,பாரதியார்,காமராசர்,அறக்கட்டளைகளின் சொற்பொழிவுக்கு முன்னிலை வகித்தும் மாலை ஏரிக்கரைக் கவியரங்கத்தில் பாவேந்தரைப்போற்றுவோம் தலைப்பில் நடைபெற்ற கவிஅரங்கத்திற்கும்,கலைமாமணி கவிஞர் பொன்னடியார் தலைமை ஏற்று நடத்தினார்.
கவியரங்கில் 20 கவிஞர்கள் கவிதைபாடினர்.இக் கவியரங்க நிகச்சியில் கலைமாமணி கவிஞர் பொன்னடியார் அவர்களுக்கு,பெங்களூர்த் தமிழ்ச்சங்கம் மைசூர் தலைப்பாகையும்,சால்வையும்,அணிவித்து சிறப்பு செய்தார்கள்.
மேலும் 51ஆண்டுகாலம் முல்லைச்சரம் 46ஆண்டுகாலம் கடற்கரை கவியரங்கம்,நடத்திய கலைமாமணி கவிஞர் பொன்னடியார் அவர்களுக்கு "பாவேந்தர் பணிச்செம்மல்"என்னும் பட்டத்தை பெங்களூர்த் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.தி.கோ.தாமோதரன் அவர்கள் அளித்தார்கள்.


-- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு  விருது