மதுரை நகைச்சுவை மன்ற மாதாந்திர விழா !

மதுரை நகைச்சுவை  மன்ற மாதாந்திர விழா !

மதுரை   மீனாட்சி மிசின் மருத்துவமனையில் 26 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது .ஒவ்வொரு மாதம் முதல் ஞாயிறு அன்று மாதாந்திர விழாவும் ஆண்டுக்கு ஒரு முறை ஆண்டு விழாவும் நடக்கின்றது .மக்கள் மருத்துவர் சேதுராமன் இடமளித்து உதவி வருகிறார் .கலைமாமணி 
கு .ஞானசம்பந்தன் அவர்கள் நடத்தி வருகிறார் .

இன்று நடந்த மாதாந்திர விழாவில் சுப்பிரமணியன் வரவேற்றார் .வேளாண் அலுவலர் ஆறுமுகம் தலைமை வகித்தார் .கவிஞர் இரா .இரவி முன்னிலை வகித்து 
நகைச்சுவைகள் சொன்னார் .இஸ்மத் தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினராக அண்ணாமலை அவர்கள் கலந்து கொண்டு நகைச்சுவை சொன்னவர்களுக்கு விவேகானந்தர் நூல் வழங்கினார் .

மாற்றுத் திறனாளிகளின் திலகம் பாலராம்ஜி எழுதிய பாற்கடல் அமுதம் என்ற நூலை  கவிஞர் 
இரா .இரவி வெளியிட ,வேளாண் அலுவலர் ஆறுமுகம்அவர்கள் பெற்றுக் கொண்டார் .

மதுரை முத்துக்குமார் நன்றி கூறினார் .ஆசிரியர் மோசஸ் மங்கலராஜ் ,மதுரை இலக்கிய மன்ற மலைச்சாமி  உளப்பட சரஸ்வதி நாராயணன் கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டு நகைச்சுவை சொன்னார்கள் .

கலைமாமணி கு .ஞானசம்பந்தன் அவர்கள் அவசர வேலை காரணமாக  வெளியூர் சென்றதால் அலைபேசியில் அழைத்து வாழ்த்துரை வழங்கினார் .
கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !