பெங்களூரு பாவாணர் பாட்டரங்கம் தந்த தலைப்பு ! பெண் கல்வி ! கவிஞர் இரா .இரவி !

பெங்களூரு  பாவாணர் பாட்டரங்கம் தந்த தலைப்பு !

பெண் கல்வி !  கவிஞர் இரா .இரவி !

பெண் கல்வி கட்டாயம் வேண்டுமென்று அன்றே
பெரியார் அனைவரிடமும் வலியுறுத்தினார்  நன்றே !

பெண்கள் மாநாட்டில் அதனால்தான் அவர்கள் 
பெரியார் என்ற பட்டத்தை வழங்கி மகிழ்ந்தனர் !

ஆண்  படித்தால் அவனுக்கு மட்டுமே நன்மை 
பெண் படித்தால் இரு குடும்பத்திற்கு நன்மை !

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதற்கு என்ற 
அறிவிலிகள் கூற்று மதிப்பற்றுப் போனது !

தீவிரவாதிகள் மிரட்டியபோதும் அஞ்சாமல் 
தன்னம்பிக்கையோடு பயின்றாள் மலாலா !

ஏவுகணை ஏவிடும் அறிவியல் கூடத்தில்
ஏற்றமிகு பெண்கள் பங்களிப்பு உள்ளன !

உலகின் தலைசிறந்த நிறுவனங்களின் 
உயர்ந்த பொறுப்பில் பெண்கள் உள்ளனர் !

இந்திய ஆட்சிப் பணியிலும் பெண்கள்
இனிய முத்திரைப் பதித்து வருகின்றனர் !

இந்திய  காவல்துறைப்  பணியிலும் பெண்கள் 
இனிய முத்திரைப் பதித்து வருகின்றனர் !

நீதித்துறையிலும் நங்கையர் பலர் 
நல்ல பல தீர்ப்புகள் வழங்கி வருகின்றனர் !

மருத்துவத் துறையிலும் மங்கையர் பலர் 
மகத்தான சாதனைகள் புரிந்து வருகின்றனர் !

விளையாட்டுத் துறையிலும் வஞ்சியர் பலர் 
வானளாவிய சாதனைகள் நிகழ்த்தி வருகின்றனர் !

ஆணை விட பெண் அறிவாற்றல் மிக்கவள் 
அனைத்துத் துறையிலும் மெய்ப்பித்து வருபவள் !

பெண் படித்தால் வீட்டிற்கு மட்டுமல்ல 
பிறந்த நாட்டிற்கும் பெருமைகள் சேரும் !

பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம் 
பார் போற்றும் புகழைப் பெற வைப்போம் !

கருத்துகள்