தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! எனை நனைத்த மழை ! கவிஞர் இரா .இரவி !தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !
எனை நனைத்த மழை ! கவிஞர் இரா .இரவி !

வானில் இருந்து வரும் திரவ அமுதம் மழை ! 
வயல்களைக் குளிர்வித்து விளைவிக்கும் மழை ! 

துளித்துளியாக விழும் பெருவெள்ளம் மழை ! 
துன்பம் மறக்க வைத்து இன்பம் தரும் மழை ! 

கடலிலிருந்துப் பயணித்து மேகமாகும்  மழை ! 
கனிந்து மண்ணிற்கு வந்து விழும் மழை ! 

வருடம்   தோறும் சீராகப் பெய்ய வேண்டும் மழை ! 
வளங்கள் பெரும் வளர்ச்சிப் பெருக்கும்  மழை ! 

மயில்கள் தொகை விரித்து ஆடினால் மழை ! 
மண் செழிக்கும் மகசூல் பெருக்கும் மழை ! 

வருமுன்னே ஆராய்ந்து சொல்கின்றனர் மழை ! 
வஞ்சியர்கள் விரும்பி மகிழ்ந்திடும் மழை ! 

அளவோடு  பெய்தால் நலமாக  வாழவைக்கும் மழை ! 
அளவின்றிப் பெய்தால் இன்னல் தரும் மழை ! 

புவி வெப்பமயமாதலைத் தடுத்திடும் மழை !  
புவியின் விளைச்சலை வளர்த்திடும் மழை ! 

காதலர்களின்  ஊடல் தீர்த்து வைக்கும் மழை ! 
காதலர்களின் கூடல் இணைத்து வைக்கும் மழை ! 

ஓரமாக ஒதுங்கி நின்ற எனை நனைத்தது மழை ! 
உடன் இறங்கி மழையில் நனைந்து மகிழ்ந்தேன் ! 


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !