வெளிச்ச விதைகள் ! நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் .

வெளிச்ச விதைகள் !



நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !  

நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம் .

வெளியீடு ; வானதி பதிப்பகம்,
 23, தீனதயாள தெரு, தி.நகர்,
சென்னை- 600 017. பக்கங்கள் ; 190 விலை ரூ. 120.


தமிழ் மண்ணின் உரம்.

      கவிஞர் இரா. இரவி அவர்கள் எங்கள் தலைமுறைகளுக்கு  ஹைக்கூ கவிதைகளை அறிமுகப்படுத்திய மிக முக்கிய ஆளுமைகளுள் ஒருவர். கவிசூழ் உலகில் ஹைக்கூக் கவிதைகளால் தனக்கான தனி இடத்தை பிடித்தவர். நான் கல்லூரி காலந்தொட்டு அண்ணன் இரவி அவர்களையும் அவரது கவிதைகளையும் அறிவேன். 

 தற்போது வெளிவந்துள்ள அவரது பதினாறாவது நூலான வானதி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ள “வெளிச்ச விதைகள்” எனும் கவிதை நூல், உறவுகள், உணர்வுகள், சமூகம், இயற்கை, காதல், அரசியல், அன்பு என அனைத்துத் தலங்களையும் உரக்க பேசும் சாமானிய மக்களின் குரலாக வெளிவந்துள்ளது.

      கவஞர்கள் எப்போதும் வானத்தில் வலம் வரும் தேவர்களல்ல.  அவர்கள் மக்களோடு மக்களாக, அவர்களது வலிகளுக்கும் குரல் கொடுக்கும் புரட்சியாளர்கள் என்பதை கவிஞர் இரா. இரவி அவர்களின் இன்னும் இறங்கி வந்து அருகில் அமர்ந்து நம்மோடு பேசும் ஒரு முயற்சி தான் இந்நூல். உதாரணமாக,

      ஆணவக் கொலை இனி வேண்டாம் மனிதனே
      ஆணவத்தை நீ கொலை செய்தால் போதும்.

என்ற வரிகளில் சாதிவெறி பிடித்த மனிதர்களிடமும் தன் கவிதை வரி கொண்டு கேள்வி எழுப்புகிறார்.  அரசியல் பேசும் போதும், எதற்கும், எவர்க்கும் அஞ்சாமல் எழுந்து நின்று, துணிந்து நின்று பேசுவதுதான் அவரது எழுத்தின் வலிமையாக தெரிகிறது. ஆம்.

      “இலங்கை நமக்கு என்றும் நட்பு நாடு அல்ல
      எம் இனத்தைக் கொடூரமாக அழித்த பகை நாடே”

என்று கடலில்  நின்று உரத்து சொல்வதாக இருக்கட்டும்.

“முன்னாள் முதல்வர் கடிதம் எழுதினார்
      இந்நாள் முதல்வர் கடிதம் எழுதினார்
      வருங்கால முதல்வரும் கடிதம் எழுதுவார்
      தொலைந்து போன கடிதம் ஆகும்.”

என்று தொலைந்து போன கடிதம் குறித்த விசாரணையாகட்டும் எல்லாவற்றிலும் தீயோர்க்கு அஞ்சாத துணிச்சலை காணலாம். 

      இறுதியாக “பொம்மை” குறித்து பேசும் போதும் “மரப்பாச்சி பொம்மை” என்ற சூழலில் பேசும் இயற்கை கவிஞராய் திகழ்கிறார்.

      இந்த மண்ணில் நம்மாழ்வார் விதைத்த விதைகளை கவிஞர் இரா.இரவி போன்ற தமிழ் சான்றோர் வெளிச்சப்படுத்தும் விதைகளை இந்த “வெளிச்சவிதைகள்”
“விதை விளைந்தால் மரம்
      இல்லையேல் மண்ணுக்கு உரம்”

கருத்துகள்