பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு ! மலரினும் மெல்லியது காதல் ! கவிஞர் இரா .இரவி !

பெங்களூருத்  தமிழ்ச்  சங்கம்  தந்த  தலைப்பு !

மலரினும் மெல்லியது காதல் !   கவிஞர் இரா .இரவி !

மலரினும் மெல்லியது காதல் ஆனால் 
மலையினும் வலியது காதல் !

ஒருவன் ஒருத்தியை  நேசித்து விட்டால் 
உயிர்  உள்ளவரை நேசிப்பது காதல் !

தடைகள் ஆயிரம் வந்த போதும் 
தகர்த்து இணைவதே உண்மைக்  காதல் !

புறஅழகுப்  பார்த்து வருவது அல்ல காதல் 
அகஅழகு ஈர்த்து வருவதே மெய்யான காதல் !

என்னவென்று விளக்கமுடியாவிடினும் 
ஏதோ ஒன்று  இணையிடம் பிடித்து இருக்கும் !

இடையில் வந்தவள் என்றபோதும் மன
எடையில் உயர்ந்து நிற்பவள் காதலி !

உன்னத காதலிக்கு உள்ளத்தில் முதல் இடம் 
உலகில் உள்ள உறவுகளுக்கு  அடுத்த இடம் !

முதல்  காதல் நினைவு என்பது இருவருக்கும் 
மூச்சு இருக்கும் வரை நினைவு இருக்கும் !

உடலில் உயிர் உள்ளவரை இருவருக்கும் 
உடலில் மூளையின் மூலையில்  இருக்கும் !

காதல் உணர்வு என்பது சொல்லில் அடங்காது 
காதலித்தவர்கள் மட்டுமே உணரும் உணர்வு !

காதலிக்கும் காலத்தில் உள்ள மனமகிழ்வு 
காதலர்களுக்கு மண்ணில் காணும் சொர்க்கம் !

நேற்று இன்று நாளை என்று முக்காலமும் 
நிலைத்து இருக்கும் ஒன்று ஒப்பற்ற காதல் !

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !