மாமனிதர் எம் .ஜி .ஆர் .! கவிஞர் இரா .இரவி !

மாமனிதர் எம் .ஜி .ஆர் .!      கவிஞர் இரா .இரவி !

நூற்றாண்டு கடந்தும் இன்றும் நினைக்கப்படுகிறார் 
நாடே கொண்டாடி மகிழ்கின்றது எம் .ஜி .ஆரை !

ஏழ்மையில் பிறந்து வளர்ந்த காரணத்தால் 
ஏழ்மை ஒழிக்க முயற்சிகள் செய்தார் !

கொடுத்துக் கொடுத்து சிவந்த கரங்கள் 
கண்ணால் கண்ட காட்சிகள் ஆனது !

தோன்றின் புகழோடு தோன்றுக என்று 
திருக்குறளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் !

மனிதநேயத்தின் சின்னமாக வாழ்ந்து சிறந்தவர் 
மக்கள் மனங்களில் என்றும்  வாழ்பவர் !

நல்லவனாகத் திரைப்படத்தில் நடித்தது மட்டுமன்றி 
நல்லவனாகவே வாழ்க்கையில் வாழ்ந்து காட்டியவர் !

ஈழத்தமிழரின் விடுதலையை பெரிதும் விரும்பியவர் 
ஈழத்தின்  விடுதலைக்கு பெரிதும் உதவியவர் !

ஏழைப்பங்காளன் காமராசரின் மத்திய உணவுத்திட்டத்தை 
ஏழைமாணவர் அனைவருக்கும் சத்துணவாக விரிவாக்கியவர் !

வெற்றி மாலைகள் பெற்றுக் குவித்தவர் 
வேதனைகள் நீக்கி மகிழ்வைத் தந்தவர் !

என்னுடைய முதல்வர்  நாற்காலியில்   ஒருகால் 
என்பது பட்டுக்கோட்டையின் பாடல்கள் என்றவர் !

நன்றி மறக்காத உயர்ந்த உள்ளம் பெற்றவர் 
நாடு போற்றும் பொன்மனச் செம்மல் ஆனவர் !

பொற்காலம் படைத்தது தமிழா வரலாற்றின் 
பொன் எழுத்துக்களில் இடம் பிடித்தவர் !

விருதுகள் பல பெற்றபோதும் என்றும் 
விவேகமாகச் சிந்தித்து எளிமையாய் வாழ்ந்தவர் !

ஏழைகளின் கண்ணீர் துடைக்க முதல்வராகி 
எண்ணிலடங்காத   திட்டங்களை நிறைவேற்றியவர் !

திரைப்படத்தில் மிகமிக நன்றாக நடித்தவர் 
தமிழக மக்களிடம் என்றும் நடிக்காதவர் !

புன்னகை மன்னராக பூவுலகில் வாழ்ந்தவர் 
புரட்சித் தலைவர் எனும் பட்டம் பெற்றவர் !

இன்னும் பல நூற்றாண்டுகள் வாழ்வார் எம் .ஜி .ஆர் .
என்றும் அழிவில்லை  எம் .ஜி .ஆர் . புகழுக்கு !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi
Attachments area

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !