ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ  !   கவிஞர் இரா .இரவி !



உலகமே உற்று நோக்கியது 
தமிழர்களின்  போராட்டம் 
கனவு நனவாகியது !


தலைவன்  இல்லாத  
போராட்டம் அல்ல 
தமிழே  தலைவன்  !


சென்னையின்  சாலைகள்  யாவும்  
மெரீனாவை நோக்கி 
மிரண்டது இந்தியா !


பொறுத்தது   போதும்  
பொங்கினான்  தமிழன்  
புரிந்தது  இந்தியாவிற்கு !

 
ஐம்பது பேரில் தொடங்கி
லட்சத்தைத் தாண்டியது 
லட்சியம் வென்றது ! 

சென்னை மட்டுமல்ல 
தமிழகமே பொங்கியது 
புரிந்தது ஆற்றல் !

உலகத்தமிழர் யாவரும் 
உணர்வை உணர்த்தினர்
தமிழன்டா ! 

வெற்றி !   வெற்றி  !
மாணவர்கள்  போராட்டம்  
வெற்றி ! 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !