சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ள எழுத்தாளர் வண்ணதாசன் ,கவிஞர் கல்யாண்ஜி அவர்களுக்கு வாழ்த்துகள் !



சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ள எழுத்தாளர் வண்ணதாசன் ,கவிஞர் கல்யாண்ஜி அவர்களுக்கு வாழ்த்துகள் !

நன்றி  .விக்கிபீடியா !

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D

.

வண்ணதாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Vannathasan 1.jpg
வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுபவரின் இயற்பெயர், சி.கல்யாணசுந்தரம் (S. Kalayanasundaram). இவர் தமிழ்நாடுதிருநெல்வேலியில் பிறந்தவர். இவரது தந்தை இலக்கியவாதி தி. க. சிவசங்கரன் ஆவார். நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளரான வண்ணதாசன், தீபம் இதழில் எழுதத் துவங்கியவர். 1962 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது 'ஒரு சிறு இசை' என்ற சிறுகதை நூலுக்காக இந்திய அரசின் 2016 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.[1]
இவரது சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. இலக்கியச் சிந்தனை உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார் வண்ணதாசன்.[2] 2016 விஷ்ணுபுரம் விருது இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.[3]

ஆக்கங்கள்[தொகு]

சிறுகதைத் தொகுப்புகள்[தொகு]

  1. கலைக்க முடியாத ஒப்பனைகள்
  2. தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்
  3. சமவெளி
  4. பெயர் தெரியாமல் ஒரு பறவை
  5. மனுஷா மனுஷா
  6. கனிவு
  7. நடுகை
  8. உயரப் பறத்தல்
  9. கிருஷ்ணன் வைத்த வீடு
  10. ஒளியிலே தெரிவது (உயிர்மை - சுஜாதா அறக்கட்டளை இணைந்து வழங்கிய 2011ஆம் ஆண்டில் சிறுகதைக்கான சுஜாதா விருதைப் பெற்றது)
  11. சில இறகுகள் சில பறவைகள்
  12. ஒரு சிறு இசை

புதினங்கள்[தொகு]

  1. சின்னு முதல் சின்னு வரை

கவிதைத் தொகுப்புகள்[தொகு]

  1. புலரி
  2. முன்பின்
  3. ஆதி
  4. அந்நியமற்ற நதி
  5. மணல் உள்ள ஆறு

கட்டுரைகள்[தொகு]

  1. அகமும் புறமும்

கடிதங்கள்[தொகு]

  1. வண்ணதாசன் கடிதங்கள்

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

கருத்துகள்