புதன், 14 டிசம்பர், 2016

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! அழுத கண்ணீர் ! கவிஞர் இரா .இரவி !தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !

அழுத கண்ணீர் ! கவிஞர் இரா .இரவி !

சென்ற வருடம் மழை வெள்ளம் வந்து 
சென்னையை அழ  வைத்தது !

இந்த வருடம் புயல் வேகமாக வந்து 
சென்னையை அழ  வைத்தது !

இயற்கையின்  சீற்றம்   கண்டபின்னும்  
இன்னும் திருந்தாமல் இருக்கலாமா ?   

மலைகளை   வெடி வைத்து தகர்த்து 
மலை போல கற்களை விற்பதை நிறுத்து !

மணலை ஆற்றில் அளவின்றி எடுத்து 
மண் வண்டியில் ஏற்றுவதை நிறுத்து !

நிலத்தடி நீரை மின்சாரக் கருவிகளால் 
நிர்மூலம் ஆக்குவதை முதலில் நிறுத்து !

அளவிற்கு  மிஞ்சினால் அமுதமும் நஞ்சு 
அளவின்றி சிதைப்பதை உடன் நிறுத்து !

நானே பெரியவன் என்ற  அகந்தை அகற்று 
நானிலத்தில் இயற்கையே பெரிது உணரு ! 

இயற்கையை   நீ சிதைக்கச் சிதைக்க 
இயற்கை உன்னை  சிதைக்கும் உணர்ந்திடு !

அழுத கண்ணீர் போதும் இனி ஒருபோதும் 
அழக்கூடாது அன்புகாட்டு இயற்கையிடம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி !

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி ! உனக்காக  நான் எனக்காக நீ  உயிர் உள்ள வரை பிரியோம் ! உடல் இரண்டு உயிர் ஒன்...