மனிதநேய மாமணி பழனியப்பன் வாழ்வார் என்றும் ! கவிஞர் இரா .இரவி !

மனிதநேய மாமணி பழனியப்பன் 

வாழ்வார் என்றும் ! கவிஞர் இரா .இரவி !

நினைவுதினம் மட்டும் 
நினைக்கப்படுபவன் அல்ல நீ !

நீங்காத நினைவை என்றும் 
நெஞ்சில் தந்தவன் நீ !

ஈர இதயம் பெற்றவன் நீ !
ஆண் தெரசாவாக வாழ்ந்தவன் நீ ! 

பார்வையற்றோரின் பார்வையானாய்  நீ !
பாரினில் உன்னத வாழ்வு வாழ்ந்தாய் நீ !

தன்னலம் மறந்து பொதுநலம் புரிந்தாய் நீ !
தன் குடும்பத்தையும் ஈடுபடுத்தினாய் நீ !

இறுதி மூச்சு வரை இயங்கியவன்  நீ ! 
என்றும் பார்வையற்றோருக்காக வாழ்ந்தவன் நீ !

இரத்ததானம் தந்து முகாம் நடத்தியவன் நீ
விழிதானம் விழிப்புணர்வு விதைத்தவன் நீ !

பிறந்தோம் வாழ்ந்தோம் என்று வாழாமல் 
பிறந்தோம் உதவுவோம் என்று வாழ்ந்தவன் நீ !

பாதியில் பார்வை இழந்த போதும் 
பார்வையற்றோர் வேடந்தாங்கல் நீ !

தான் பட்ட துன்பம் பார்வையற்றோர் 
தான் படக்  கூடாது என்று நீ !

தன் சொந்தப பணத்தில் 
தன்னலமற்ற விடுதி தொடங்கினாய் !

மனிதநேய மாமணி பட்டத்தை 
மருதமுத்து துணை வேந்தரிடம் பெற்றாய் !

மனதரில் மாணிக்கமாக வாழ்ந்து 
மண்ணின் ஆளுநரிடம் விருது பெற்றாய் !

வருடா வருடம் இரத்ததான முகம் நடத்தியதற்கு 
வளமான மதுரையின் ஆட்சித் தலைவர் விருது பெற்றாய் !

அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்து சிறந்தாய் 
அடுத்தவர்களின் துயர் துடைத்து வாழ்ந்தாய் !

சராசரி வாழ்க்கை வாழாமல் நீ 
சாதனை வாழ்க்கை வாழ்ந்து சிறந்தாய் !

அகவிழி பார்வையற்றோர்  விடுதி தொடங்கி
அகவிழியோடு நடந்து கொண்டாய் நீ !

உன்னால் தொடங்கப்பட்ட விடுதி இன்றும் 
உன் தம்பி கோபியால் இயங்கி வருகின்றது !

நீ வைத்த  அகவிழி விடுதி  விதை இன்று 
நன்றாக விருட்சமாக வளர்ந்து வருகின்றது !

மதுரையின் பெருமைகளில் ஒன்றானது 
மாமனிதன் நீ தொடங்கிய அகவிழி  விடுதி !

மனிதநேயத்தின் சின்னமாக உள்ளது 
மனிதநேயத்தை மற்றவர்களுக்கும் கற்பிக்கின்றது !

உடலால் உலகை விட்டு மறைந்தாலும் 
உன்னத சேவையால் வாழ்வாய் என்றும் நீ !

கருத்துகள்