தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! சுனாமி சுவடுகள் ! கவிஞர் இரா .இரவி !

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !

சுனாமி சுவடுகள் ! கவிஞர் இரா .இரவி !

அம்மா இருக்க  குழந்தை இறந்தது 
குழந்தை இருக்க  அம்மா இறந்தது !

குழந்தைகளை ஆதரவற்றோர் ஆக்கியது 
பெற்றோர்களை குழந்தையற்றோர் ஆக்கியது !

கொடுமைகள் சொல்லில் அடங்காது 
கொன்று மகிழ்ந்தது கொடிய சுனாமி !

எதிர்பாராத நேரத்தில் இடியாய் வந்தது 
எல்லோரையும் புரட்டிப் போட்டு விட்டது !

கடல்அலை ராட்சத பேரலையாய் வந்தது 
கண்டபடி வீசி அடித்துக் கொன்று மகிழ்ந்தது !

தூங்கியவர்களை நிமிடத்தில் பிணமாக்கியது 
தூரமாக நின்றவர்களை விரட்டிப் பிடித்தது !

இறுதிச்சடங்கிற்கு  சடலம் இல்லாமல் செய்தது 
இறந்தவர் பிழைத்தவர் தெரியாமல் போனது !

ஆடிய மனிதர்களின் ஆட்டம் நிறுத்தியது 
ஆட்டம்  இயற்கையிடம் செல்லாது அறிவித்தது  !

பலரது வீடுகள் இல்லாமல்  போனது
பலரது உடைமைகள் கடலுக்குள் போனது !

இன்று நினைத்தாலும் அச்சம் பிறக்கும்    
என்று நினைத்தாலும் அச்சம் பிறக்கும் !   

இயற்கையின்  சீற்றம் எப்படி  உணர்த்தியது 
இயற்கையே பெரிது என்பதைக் காட்டியது !

சுனாமி சுவடுகள் பலரின் வாழ்வில் 
சோகம் தந்து வடுக்களாய் நிலைத்தது !
 
பஞ்ச பூதங்களை சிதைப்பதை நிறுத்து 
பஞ்சத்தில் ஆழ்த்திடுவோம் என உணர்த்தியது !   

இனி ஒரு சுனாமி வந்தால் இருக்காது உலகம் 
இனியாவது இயற்கை நேசிப்பை வழக்கமாக்குவோம் !

மனிதர்கள் மீது மட்டுமல்ல இயற்கையின் 
மீதும் அன்பு செலுத்தி வாழ்ந்திடுவோம் !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்