படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

தாயில்லாக் குழந்தை
தானே சமைக்கின்றது
பசியாற !

வேண்டாம் ஊதுகுழல்
வீசிவிட்டு
ஏந்து பாடப்புத்தகம் !

உலை கொதித்து
சோறு பொங்கி
உண்ணவேண்டும் !

கொடிது கொடிது
வறுமை கொடிது
வாடிடும் சிறுமி !

உதவிட யாருமில்லை
ஆதரவற்ற சிறுமியின்
அல்லல்காட்சி !

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்