‘இரா. இரவியின் படைப்புலகம்’ நூல் ஆசிரியர்; தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் ! முன்னுரை ; முதன்மைச் செயலர் முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் !

‘இரா. இரவியின் படைப்புலகம் 

நூல்  ஆசிரியர்; தமிழ்த் தேனீ முனைவர் 
இரா .மோகன் அவர்கள் !

முன்னுரை ; முதன்மைச் செயலர் முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் !


கோப்பைத் தேநீர் !கவிஞர் இரவி தொடர்ந்து இயங்கி வருபவர்.  தமிழ்நாட்டின் மேன்மை பற்றி எப்போதும் சிந்திப்பவர்.  சமூக அவலங்கள் குறித்து வருத்தப்படுபவர்.  பல உயர்ந்த மனிதர்களோடு நட்பு வைத்திருப்பவர்.  நியாயம் வழங்கும் நீதியரசர்கள் முதல், அரிசி விநியோகிக்கும் நியாயவிலைக் கடைக்காரர்கள் வரை பல நிலைகளில் இவருக்கு மனிதர்கள் அறிமுகம். யாருக்கு எந்த உதவி என்றாலும், பேருக்கு ஆசைப்படாமல் ஓடிச்சென்று உதவி வருபவர். ஓய்வு நேரங்களில் இலக்கிய நிகழ்வுகளில் ஐக்கியப்படுத்திக் கொள்பவர்.  இணையத்தில் இனிய தகவல்களைப் பரப்பி மனிதர்கள் மனங்களில் மகரந்தச் சேர்க்கை செய்பவர்.

பேராசிரியர் மோகன் அவர்களின் இலக்கிய மண்டலத்தில் கவிஞர் இரவியும் ஒருவர்.  அவரைப் பக்குவமாக செதுக்கி, அவருக்கே தெரியாமல், அவரிடம் ஒளிந்திருக்கும் ஆற்றலை வெளிப்படுத்த பேராசிரியர் எடுக்கும் முயற்சிகளும், கொடுக்கும் அரவணைப்பும் முக்கியமானவை. 

 அவருடைய எல்லா நூல்களுக்கும் முனைவர் மோகன் அவர்களுடைய அணிந்துரை அவசியம் இருக்கும்.  இயல்பாகவே பெருந்தன்மையும், நல்லவற்றை மட்டுமே காண்பதற்குக் கடிவாளம் போட்டுக் கொண்ட மனப்பான்மையும் அமையப் பெற்ற அவர், தொடக்ககால தவழ்தலிலிருந்து தற்போது நிகழும் ஓட்டம் வரை மெச்சுகிற வார்த்தைகளால் இரவியை உச்சி முகர்பவர்.  அதே நேரத்தில் தேவையான அறிவுரைகளையும் அவ்வப்போது வழங்கி இரவியை நெறிபடுத்தியிருக்கிறார்.

பேராசிரியர் மோகன் கவிஞர் இரவிக்கு வழங்கிய அணிந்துரைகளின் தொகுப்பாக, ‘இரா. இரவியின் படைப்புலகம் என்கிற இந்த நூல் மலர்ந்திருக்கிறது. இதில் இரவியின் இலக்கிய வளர்ச்சியும் நமக்குத் தெரிகிறது. இந்த நூலைப் படித்தால் இரவியின் அனைத்து நூல்களையும் வாசித்து மகிழ வேண்டும் என்கிற எண்ணம் வரும்படி இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நூல் அவருக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம். அங்கீகாரத்தை ஓட்டத்தின் நடுவே கொடுக்கும் ஒரு கோப்பைத் தேநீராகக் கருத வேண்டுமே தவிர, இறுதியில் கொடுக்கும் கோப்பையாக நினைத்துவிடக் கூடாது.

இரவி இன்னும் தீவிரமாக இயங்க வேண்டும். மகத்தான நோக்கங்களை மனதில் பதியவைத்துக் கொண்டு உலக சகோதரத்துவத்தை நோக்கி அவர் படைப்புகள் விரிய வேண்டும் என்று அவரை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கு, நாற்று கண்களுக்குத் தெரிந்தாலும் அது மரமாக வளரும் வரை குடைபிடிக்கும் எண்ணத்தைக் கடைபிடிக்கும் பேராசிரியர் இரா. மோகன் அவர்களை மனமாரப் பாராட்டுகிறேன்.
                                                               அன்புடன்,
 வெ. இறையன்பு.
---------------------------
கவிஞர் இரா .இரவி எழுதியுள்ள 16 நூல்களின் சாரமாக வெளி வருகின்றது.

வெளியீடு ;பதிப்பு உலகில் தனி முத்திரை பதித்து வரும் வானதி பதிப்பகம் .
.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்