நன்றி .தினமணி இணையம் -- காத்திருப்பு: கவிஞர் இரா. இரவி

நன்றி .தினமணி இணையம் 
-- 

காத்திருப்பு: கவிஞர்  இரா. இரவி

By dn
First Published : 29 February 2016 09:49 AM IST
இலவு காத்த கிளி கதையாக  
இங்கே காத்திருந்து எமாந்தோர் அதிகம் !
பழம் என்று காத்திருந்து பஞ்சானது கண்டு 
பச்சைக்  கிளி வருந்தியது போலவே !
பலர் நடக்காது என்று தெரிந்திருந்தும் 
பொறுமையோடு காத்திருந்து ஏமாறுகின்றனர் !
பேருந்திற்காகக் காத்திருக்கும் பயணி 
பேருந்து வந்ததும் பயணிக்கிறான் !
பெண்ணிற்காகக் காத்திருந்து பலர் 
பொன்னான வாழ்கையை இழந்தனர் !
காத்திருந்த காலத்தில் செயலாற்றினால் 
கடமையில் புகழ் சேர்ந்திருக்கும் !
பொன்னை விட மேலானது நேரம் 
பொன்னை வாங்கலாம் நேரத்தை வாங்கமுடியாது !
வினாடியின் மதிப்பு விளையாட்டு வீரன் அறிவான் 
நிமிடத்தின் மதிப்பு விமானப்பயணி  அறிவான் !
அர்த்தமுள்ள அளவான காத்திருப்பு நன்று 
அர்த்தமற்ற அளவற்ற காத்திருப்பு நன்றன்று !
அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு 
அர்த்தமற்ற அளவற்ற காத்திருப்பும் நஞ்சு !
பொருளற்ற காத்திருப்பு விவேகமன்று 
பொழுதை மதித்தவன் சிறப்பான் !
.
http://www.dinamani.com/kavithaimani/2016/02/29/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%C2%A0-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE.-/article3302848.ece

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்