திங்கள், 14 டிசம்பர், 2015

தினமணி இணையம் தந்த தலைப்பு ! சுடும் நினைவுகள் ! கவிஞர் இரா .இரவி !

தினமணி இணையம் தந்த தலைப்பு !

சுடும் நினைவுகள் ! கவிஞர் இரா .இரவி !

காதலில் வென்றால் திருமணத்தில் முடிந்தால்
கற்கண்டு நினைவுகள் நாளும் இனிக்கும் !

காதலில் தோற்றால் சுடும் நினைவுகள்
கனவிலும் நினைவிலும் பெரும் தொல்லை !
நடமாடும் நடைப்பிணமாய் நடமாட்டம்
நாள் நகருவது பெரும் போராட்டமாகும் !
மறந்து விடுங்கள் இரு சொல்தான் ஆனால்
மனதில் ஓராயிரம் முறை ஒலிக்கின்றது !
மறந்து விட்டதாய் உதடுகள் உரைக்கலாம்
மங்கையின் மனம் ஒரு போதும் உரைக்காது !
நீயே என் உலகம் என்று உரைத்தவள்
நீங்கினால் உலகின் ஒரு மூலையில் !
நம்மைப் பிரிக்க யாராலும் முடியாது
நங்கை சொன்னாள் அவளே பிரிந்தாள் !
உடல் இரண்டு உயிர் ஒன்று என்று உரைத்தாள்
உடலின் உள் இருந்து உயிரை வதைத்தாள் !
கடல் அளவு உனைப் பிடிக்கும் என்றாள்
கடலில் தத்தளிக்க விட்டுச் சென்றாள் !
வான் அளவு உனைப் பிடிக்கும் என்றாள்
வெட்ட வெளியில் விட்டுச் சென்றாள் !
வானும் நிலவும் போல நாம் என்றாள்
வஞ்சி வாட வைத்துச் சென்றாள் !
உயிர் வாழ்வதே உனக்காக என்றாள்
உயிர் உருக வருத்திச் சென்றாள் !
நினைவுகள் இரு வகை உண்டு
ஒளிரும் நினைவுகள் ! சுடும் நினைவுகள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி !

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி ! உனக்காக  நான் எனக்காக நீ  உயிர் உள்ள வரை பிரியோம் ! உடல் இரண்டு உயிர் ஒன்...