கவிதையின் கரு ! கவிஞர் இரா .இரவி !



கவிதையின் கரு ! கவிஞர் இரா .இரவி !

நன்றி பாக்யா வார இதழ் !
அடியே வெள்ளையம்மா
அடித்தாய் கொள்ளையம்மா
என் உள்ளம் இல்லையம்மா !
-----------------------------------
புன்னகை என்ன விலை
என்றேன் நீ ஒரு பதில் புன்னகை
செய் போதும் என்றாள் !
---------------------------------------
ஆடையில் சிக்கனம்
தேவை இக்கணம்
என்பது இலக்கணமா ?
------------------------------------
சூரியன் உதிக்க
மலர் மலரும்
மலர் உதிக்க
சூரியன் மலர்ந்தது !
-----------------------------------
காக்கும் கரங்கள்
சேவை நிறுவனத்தின்
விளம்பரத் தூதுவரோ ?
--------------------------------------
கரம் பற்றி வாழலாம் என்பதை
கன்னி கைகள் மொழியால்
உணர்த்துகின்றாளோ ?
------------------------------------------
பற்கள் தெரியாமல்
புன்னகை புரியும்
பாவை முகமோ
பால் நிலவை மிஞ்சியது !
------------------------------------------
உனக்கென்ன சிரித்து விட்டாய்
உள்ளுக்குள் சிதைந்தேன் நான்
மனசுக்குள் பூகம்பம் !
--------------------------------------------
பாரத்தால் பசி தீரும்
பழமொழியை மெய்ப்பித்த
மெய்யழகியே வாழ்க !
-----------------------------------------------
கவிதைகளைக் கேட்டு
தட்டிய கரத்தை
பிரிக்க மனமில்லையோ

கருத்துகள்

கருத்துரையிடுக