படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !


விளையும் பயிர்                  வி. ஆர் கணேஷ் சந்தர்
‘தொப்பி’ என்ற வார்த்தை ஒவ்வொரு வரியிலும் வருமாறு வெவ்வேறு பத்து வரிகள் எழுது – இதுதான் ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு கிளாஸ் டெஸ்ட்டில் ஆசிரியர் கேட்ட கேள்வி
மாணவன் எழுதிய வரிகள்
1.   தொப்பி அவசியம்
2.   தொப்பி அவசியமில்லை
3.   தொப்பி அணிந்துதான் சாலையில் நடமாடவேண்டும்
4.   தொப்பி பற்றிய அரசு ஆணைக்குக் கோர்ட் தடை
5.   இலவசத் தொப்பி வழங்கும்போது மாணவனின் ஜாதி கேட்கக்க கூடாது - அரசு உத்தரவு
6.   அஞ்சலகம் வழியாக இலவசத் தொப்பி வழங்க அரசு யோசனை
7.   தொப்பி பிரச்னையால் அஞ்சலகப் பணிப் பளு கூடும் – தொழிற் சங்கங்கள் எதிர்ப்பு
8.   தொப்பியையும் சட்டைக் காலரையும் சேர்த்துத் தைக்கும் முகாம்கள் - அரசு அறிவிப்பு
9.   தொப்பி அணிந்தால்தான் மாணவ மாணவியருக்கு பஸ்ஸில் அனுமதி  அரசு புதிய உத்தரவு
10.  தொப்பியையும் பஸ் பயணத்தையும் இணைக்க முடியாது – அரசுக்கு கோர்ட் கண்டிப்பு

ஆசிரியர் எல்லா வரிகளையும் படித்துப் பார்த்து, ‘பிழையில்லாமல் எழுதியிருக்கிறாய். பாராட்டுக்கள்’ என்றார். எதிர்காலத்தில் அவன் பிரதம மந்திரி ஆனான். 



ஹைக்கூ
உன் துயரம்
என் உயரம்
-மருத்துவமனை
------வி. ஆர் கணேஷ் சந்தர்
    29.10.2015

கருத்துகள்