படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! நன்றி திரு .தமிழ் அரசு !

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !
நன்றி திரு .தமிழ் அரசு !

இனிய வணக்கம்...
...................................

இன்றைய நாள் தங்களுக்கு உற்சாகமும்,
உத்வேகமும் தரும் நாளாக அமையட்டும்.

இன்றைய சிந்தனை..
........................................

சிரிப்பு ஒன்றுதான் வழி..
...............................................

சிரியுங்கள், உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்
அழுங்கள்,  நீங்கள் ஒருவர்தான் தனித்து அழுது கொண்டிருப்பீர்கள்.இன்று வாழ்வில் நாம் திரும்பிப் பார்க்கும் திசையில் எல்லாம் தெரிபவை இரண்டு.
அவைகளில் ஒன்று திருப்தி. மற்றென்று பேராசை. இந்த இரண்டும் தனித் தனியாக்கூட இல்லை. உள்ளங்கையும் புறங்கையும் போல ஒன்றின் இரு பக்கங்களாக இருக்கின்றன.
யாரிடம் பேராசை இருக்கிறதோ அவரிடம் மறுபுறம் திருப்தியும் இருக்கிறது. கிடைத்தற்குப் திருப்திப்பட்டுக் கிடைக்க வேண்டியதற்காக உழைக்கும் ஆரோக்கியமான மனநிலை தென்படவில்லை.
காரணம், மன இறுக்கம், மன உழைச்சல்.இந்த மன புகைச்சலிருந்து விடுபட உதவுவது மனம் விட்டு சிரிப்பது.
அப்படி ஒரு மருந்து இருப்பதை நாம் மறந்துவிடுகிறோம். அவ்வளவுதான்.சிரிப்பெனும் மருந்தைத் தினம் தினம் அருந்துங்கள்
சிரிப்பே உலகின் மிகச்சிறந்த மருந்து என்று சொன்னால், அது மிகையல்ல.
உலக வாழ் உயிரனங்களில் நம்மால் மட்டுமே சிரிக்க முடியும். சிரிப்பினால் எவ்வளவு நன்மைகள் என்று சிரித்து பாருங்கள்.
எனவே, நோய்விட்டுப் போக மனம் விட்டுச் சிரியுங்கள்.
சிரிப்பது உங்கள் கடமை. மனிதனின் சோர்வை அகற்றுவது சிரிப்பு. சிரிக்கும் உணர்வு இருந்தால் எத்தனை கொடிய துன்பத்தையும் துரத்தமுடியும்.
மனதுக்கு தைரியம் அளிப்பது நகைச்சுவை உணர்வுதான். சிரிக்க கூடிய சக்திதான்.சிரிப்பு ‘கவர்ந்திழுக்கக்’ கூடியது முகம். சிரித்த முகத்துடன் இருப்பவர்கள்,
அந்த புன்சிரிப்புதான் எத்தனை அழகானது!!!
கஷ்டங்கள் யாவற்றிலிருந்தும் விடுபட, சிரிப்பு ஒன்றுதான் வழி. உங்களால் சிரிக்க முடிகிறது
என்றால் நல்ல மனத்தோடு இருக்கிறீர்கள் என்று பொருள். சிரிப்பு உங்களுக்குஉடல் நலத்தைத் தருகிறது. செல்வத்தைத் தருகிறது. ஏன் அதை நீங்கள் விடவேண்டும்.?
இன்றைய் உலகம் இளையர்கள் கையில். இளையர்கள் சிரிப்பை விரும்புகிறார்கள்.நீங்கள் சிரிக்காமல் இருந்தால் இளைய தலைமுறையினர் நட்பை இழக்கிறீர்கள்.
உலகத்துடன் உள்ள தொடர்பை இழக்கிறீர்கள்.
இந்த பரபரப்பான வாழ்க்கைச் சுழலில் மனம்விட்டு அடிக்கடி சிரிப்பது மிக்க அவசியமாகிறது.
ஆம்..,நண்பர்களே.,
சிரிப்பு ஆக்கபூர்வமமானது.
சிரியுங்கள். மனம் சுத்தமாகிறது.
ஆரோக்கியமடைகிறது.
மனம் ஆரோக்கியமடைந்தால்
அதைத்தொடர்ந்து உடம்பும்
ஆரோக்கியம் அடைகிறது.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !


கருத்துகள்