‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. தந்துரை முனைவர் பேரா. இ.கி. இராமசாமி

‘கவியமுதம்’நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
தந்துரை  முனைவர் பேரா. இ.கி. இராமசாமி !
தமிழ்த் துறைத் தலைவர் யாதவா கல்லூரி  மதுரை 
*****
பட்டாம்பூச்சி போன்ற உற்சாகமும், தேனீப் போன்ற உழைப்பும் உடையவர் ஹைக்கூ திலகம் இரவி. வானதி பதிப்பகம் இவருடைய கவியமுதம் நூலை வெளியிட்டுள்ளது.  உலக நிகழ்வுகளை உடனுக்குடன் கவிதையில் ஏற்றும் திறன் பெற்றவர் இரவி.  பெரியார் கொள்கை இவருக்கு உரம், அந்தக் கொள்கைத் தளத்தில் நின்று கவிதை புனைவது இவர் பாணி.  இவருடைய கவிதைகளுக்குச் சொற்கள் அணிவகுத்து நிற்கும். வலைத்தளங்களில் இவருடைய படைப்புகள் உலா வருகின்றன. எழுத்துப் போலப் பேச்சும், திறனாய்வும் இவருக்குக் கைவந்த கலைகளாகும்.  இவருடைய கவிதைக் கலசத்தில் இனிப்பும் உண்டு ; கசப்பும் உண்டு ; காரமும் உண்டு .
பணத்தில் காந்தியடிகளின் படத்தைப் போட்டுவிட்டு  நடைமுறையில் அவரை எப்படியெல்லாம் இந்தியர்கள் அவமானப்படுத்துகிறார்கள் என்பதைச் சொல்லம்புகளால் சுட்டிக்காட்டுகிறார் இரவி.
  மது வாங்கத்தரும் பணத்தில் காந்தியடிகள்!
              மடையர்கள் கையூட்டுப் பணத்தில் காந்தியடிகள்!
              வரி கட்டாத கறுப்புப் பணத்தில் காந்தியடிகள்!
              வஞ்சகர்களின் கொள்கைப் பணத்தில் காந்தியடிகள்!
              அரசியல்வாதிகளின் ஊழல் பணத்தில் காந்தியடிகள்!
              ஆன்மிகவாதிகளின் ஏமாற்று வசூல் பணத்தில்                  காந்தியடிகள்!
                                                                      (பக். 142)
இப்படி, அஞ்சாமையும், அறிவூக்கமும் கொண்டு படைக்கப்பட்ட இவரின் கவியமுதம் நூலை வரவேற்று, இவரை நெஞ்சம் நிறைய பாராட்டி மகிழ்கின்றோம்.

03-03-2015

.வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17. பக்கங்கள் : 172, விலை : ரூ. 100/- பேச 044 24342810 . 24310769. 
மின் அஞ்சல் vanthipathippagam@gmail.com
இணையம் www.vanathi.in


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்