மதுரை சேதுபதி மேனிலைப் பள்ளியின் 125 ஆண்டு விழா தொடங்கியது

மதுரை சேதுபதி மேனிலைப் பள்ளியின் 125 ஆண்டு விழா தொடங்கியது 


மகாகவி பாரதியார் ஆசிரியராகப் பணி புரிந்த பெருமை பெற்ற மதுரை சேதுபதி மேனிலைப் பள்ளியின் 125 ஆண்டு விழா தொடங்கியது .இவ்விழாவில் நிறுவனர் படம் ,மன்னர் சேதுபதி  படம் ,மகாகவி பாரதியார் படம் திறந்து வைத்தனர் .

மதுரை  மேயர் திரு ராஜன் செல்லப்பா ,தமிழக அரசின்  டெல்லி பிரதிநிதி திரு சக்கையன்  ,பள்ளி முன்னாள் மாணவர்  சுவாமி ஓம்காரனந்தா, அருட்ச் செல்வர் சங்கர சீதாராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மனிதத் தேனீ  இரா சொக்கலிங்கம்  பாரதியார் படம் திறந்து வைத்து உரையாற்றினார் .கலைமாமணி கு .ஞான சமந்தன் அவர்களை நடுவராகக்  கொண்டு பட்டிமன்றம் நடந்தது .முன்னாள் மாணவர்  ரோபோ சங்கரும் பேசினார் .

நாளையும் நாளை மறு நாளயும் விழா நடக்க உள்ளது .
நாமன்  6 ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை 5 ஆண்டுகள் மகாகவி பாரதியார் ஆசிரியராகப் பணி புரிந்த பெருமை பெற்ற மதுரை சேதுபதி மேனிலைப் பள்ளியில் பயின்றேன்.+2 இளங்கோ மேனிலைப் பள்ளியில் பயின்றேன்.

இன்று விழாவிற்கு வந்த முன்னாள் மாணவர்களிடம் முகவரியும் நன்கொடையும் பெற்றனர் .   முன்னாள் மாணவர்களை மாகாகவி   பாரதியார் சிலை முன்பு நிற்க   வைத்து புகைப்படம் எடுத்து உடனுக்குடன்  வழங்கினார்கள் .விழா கோலாகலமாக நடைபெற்று வருகின்றது .

கவிஞர் மணிவண்ணன் தொகுப்புரை வழங்கினார் .

மலரும் நினைவுகளுடன் ,மகிழ்ச்சியுடன் நானும் கலந்து கொண்டேன் .
என்னுடைய நேர்முகம் எல்லாவற்றிலும் நானும் குறிப்பிடுவது உண்டு .நான் மகாகவி பாரதியார் ஆசிரியராகப் பணி புரிந்த பெருமை பெற்ற மதுரை சேதுபதி மேனிலைப் பள்ளியில் பயின்றவன் .பள்ளியின் நுழைவாயில் உள்ள பாரதியார் சிலை இருக்கும் மாணவனாக இருந்த பொது அந்த பாரதியார் சிலை  தந்த உத்வேகம் தான் என்னை தமிழ்ப் பற்று உள்ளவனாக மாற்றியது .

கருத்துகள்