உலக மருத்துவர் தினம் ! மருத்துவர்கள் ! கவிஞர் இரா .இரவி !

உலக  மருத்துவர் தினம் !

மருத்துவர்கள் !  கவிஞர் இரா .இரவி !
வாழ்நாளை நீட்டிக்கும் வல்லவர்கள் 
வாழ்வாங்கு வாழும் நல்லவர்கள் !
இறவாமல் செய்ய முடியாவிடினும் 
இறப்பைத் தள்ளிப் போடும் இனியவர்கள் !
ஆறு நூறு  வயது பேதமின்றி 
அனைவரையும் நலமுடன் காப்பவர்கள் !
கற்ற மருத்துவக் கல்வியை 
கடைசிவரை மறக்காதவர்கள் !
ய்வு பெரும் வயதானாலும் 
ஓய்வின்றி மருத்துவம் புரிபவர்கள் !
வாழையடி வாழையென மருத்துவ 
வாரிசுகளையும் உருவாக்கி வருபவர்கள் !
முகம் சுளிக்காமல் எந்நேரமும் 
முன்வந்து மருத்துவம் புரிபவர்கள் !
நேரம் காலம் பாராமல் எந்நேரமும் 
நேயத்துடன் உயிர் காப்பவர்கள் !
நாடியைப் பிடித்துப் பார்த்தே 
நலம் நலமின்மை சொல்பவர்கள் !
விழிகளை உற்று நோக்கியே 
வினாக்களுக்கு விடை காண்பவர்கள் !
இதயத் துடிப்பை கேட்டுப் பார்த்தே 
இனிதே  மருந்து  தருபவர்கள் !
விபத்தில் அடிபட்டு வருபவர்களுக்கு 
ஆபத்து நீக்கி அருள்பவர்கள் !
நோயால் வாடிடும் நோயாளிகளுக்கு 
நிவாரணம் தந்து வாழ்விப்பவர்கள் !
வலியால் துடித்து வாடுபவர்களுக்கு 
வலிஅகற்றும் வல்லவர்கள் !
இரத்தம் போனவர்களுக்கு உடன் 
இரத்தம்  ஏற்றிக்  காப்பவர்கள் !

இதய நோய் உள்ளவர்களுக்கு 
இதயத்தை இதமாக்கிடும் இனியவர்கள் !
மனோதத்துவமும் அறிந்து வைத்து 
மனதை மகிழ்வித்து அனுப்புபவர்கள் !
உடல்காயம் மட்டுமன்றி நோயர்களின் 
மனக்காயமும் ஆற்றிடும் மாண்பாளர்கள் !
சர்க்கரை நோயாளிகளிடம் அன்பாகவும் 
சர்க்கரையாகவும் பேசி அளவைக் குறைப்பவர்கள் !
மனித உயிர்களின் மகத்துவமறிந்த  
மண்ணின் மகத்துவமான மாண்பாளர்கள் !
நம்பிக்கை இல்லாத நோயாளிகளுக்கும் 
நம்பிக்கை விதைக்கும் நாயகர்கள் !
மூச்சு இருக்கும்வரை முடிந்தளவு 
மற்றவர் மூச்சு காக்கும் முனிவர்கள் !
சாகாமல் காத்திட என்னவெல்லாம் 
செய்ய முடியுமோ அனைத்தும் செய்பவர்கள் !
பிறர்உயிரை தன்னுயிர் போல  எண்ணி
பிரிந்திடாமல் உயிரைக் காப்பவர்கள்

எங்கும் யாரும் கண்டதில்லை கடவுளை !
எல்லோரும் காண்கிறோம் மருத்துவர்களை !

மண்ணில் வாழும் கடவுள்கள்  மருத்துவர்கள்  !
மனதில் வாழும் கடவுள்கள்  மருத்துவர்கள்  !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்