மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் தோழர் தியாகு உரை


மதுரையில் தோழர் தியாகு உரை

நிகழ்ச்சி ஏற்பாடு மக்கள் கண்காணிப்பகம்

தொகுப்பு கவிஞர் இரா .இரவி

மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும்

ஆஸ்திரியா நாட்டில் ஆண்டில் 1806 மெக்காலையா எழுதிய நூலைப்படித்துவிட்டு அந்த நாட்டின் மன்னர் மரண தண்டனை ஒழித்து தீர்மானம் நிறைவேற்றினார்.
காந்தியடிகளின் கருத்து
இறைவன் தந்த உயிரை மனிதன் பறிக்க கூடாது .இதைத்தான் நீதிபதி கிருஷ்ணய்யர் வலியுறுத்தி வருகிறார் .
மவுன் பேட்டன் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரிட்டிஷ் பிரதமர் மார்கெட் தாட்சர் மரண தன்டனை கொண்டு வர முயற்சிச் செய்தார் .எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்பால் கை விடப் பட்டது .
பிரிட்டிஷ் மரணதண்டனை ஒழித்துவிட்டது .
இந்தியா பிரிட்டிஷ்இடமிருந்து விடுதலை பெற்ற போதும் மரணதண்டனையிலிருந்து விடுதலை பெறவில்லை . வாழ்வுரிமைக்கு தன்னுரிமைக்கு எதிரானது மரண தண்டனை .எந்த ஒரு தனி மனிதன் கையிலும் மரண தண்டனை வழங்கும் அதிகாரம் இருக்கக் கூடாது .மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது மரண தண்டனை.
துருக்கி நாட்டில் மரண தண்டனை இல்லை .உலகின் பல நாடுகளில் மரண தண்டனை ஒழித்துவிட்டனர்.அமெரிக்க அய்க்கிய நாடுகளில் 8 நாடுகளில் மரண தண்டனை ஒழித்துவிட்டனர்.
சீனா ,மலேசிய ,சிங்கப்பூர் நாடுகளில் மரண தண்டனை உள்ளது .போதைகடத்தல் ஒழிக்க வைத்து இருப்பதாகச் சொல்கிறார்கள் .ஆனால் மரணதண்டனை இருப்பதால் போதைகடத்தல் ஒழிந்துவிடவில்லை என்பதே உண்மை . போர்ச்சுக்கல் நாட்டில் பிடிபட்ட இந்தியக் கைதிகள் சலீம் ,மோனிகா பேடி ஆகியோருக்கு மரண தண்டனை வழங்க மாட்டோம் .ஆண்டுகளுக்கு மேல் சிறை வழங்க மாட்டோம் என்று எழுத்து .மூலமாக
இந்தியா எழுதிக் கொடுத்துப் பெற்ற வரலாறு உண்டு .
அறிவு அதிகாரத்தின் அடையாளம் மரண தண்டனை ..ஒரு மனிதனின் வாழ்வு அதிகாரத்தை ஒரு மனிதன் கையில் தருவது தவறு என்று நீதிபதி பகவதி கூறி உள்ளார் .இந்தியா அரசியல் சட்டத்திற்கு விரோதமானது மரண தண்டனை என்றார் .இயற்கை நீதிக்கு முரணானது மரண தண்டனை.அரிதிலும் அரிதான வழக்குகளில் மரண தண்டனை வழங்கலாம் என்று சொன்னவர்களிடம் அரிதிலும் அரிது என்றால் எது ?அதற்கு வரையறை என்ன?என்றார் நீதிபதி பகவதி .ராஜீவ் காந்தி வழக்கை அரிதிலும் அரிதான வழக்கு என்று சொல்லிவிட்டு .ஒப்பந்தம் ராஜீவ் காந்தி ,ஜெயவர்தனே, பிரபாகரன் மூவரும் டெல்லியில் கையொப்பம் இட்டனர் என்று தீர்ப்பில் எழுதி உள்ளனர் .ராஜீவ் காந்தி ,ஜெயவர்தனே இருவரும் ஒப்பந்தம் இலங்கையில் கொழும்பில் கையொப்பம் இட்டனர்.அனைவருக்கும் தெரிந்த ஒன்று .இது நீதிபதிகளுக்கு தெரியவில்லை.தடா சட்டத்தின் வழங்கிய தீர்ப்பு .இப்போது தடா சட்டம் ஒழிக்கப் பட்ட பின் அந்தச் சட்டத்தின் படி வழங்கிய தீர்ப்பு மறு பரிசீலனை செய்ய வேண்டும் .இந்தக் குற்றம் தடைச் சட்ட குற்றம் அல்ல எனவே தடா சட்டத்தில் விசாரித்தது சேலத்து என்று வழக்கறிஞர் நடராஜன் வாதிட்டார் .இதற்கு முன் ஒரு வழக்கில் ,கல்பனாத்ரா வழக்கில் தடா குற்றம் இல்லை எனிவே சாதாரண சட்டத்தி மறு விசாரணை செய வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளனர் .
இந்தியா அமைதிப்படை செய்த அட்டுழியத்தை சான்றுகளுடன் விடுதலைப் புலிகள் புத்தகமாக வெளியிட்டு உள்ளனர் .அந்தப் புத்தகத்தை தடை செய்து விட்டு .இந்த வழக்கில் கொலைக்கான காரணமாக அந்த நூலை சான்றாக எடுத்து உள்ளனர் .தடை செய்யபட்ட நூலை சான்றாக எடுக்கலாமா?.
நீதிபதி கிருஷ்ணய்யர் சொல்கிறார் இலங்கையில் இருந்தது இந்தய அமைதிப்படை அல்ல .அமைதியை கொல்லும் படை .தமிழ் மக்களைக் கொன்றப் படை .இந்தியா நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்ற ஒப்பந்தம் என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர் .ஆனால் ராஜீவ் காந்தி ,ஜெயவர்தனே, ஒப்பந்தம்
இந்தியா நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறவில்லை என்பதே உண்மை
அறிக்கை மட்டுமே வாசித்தனர்.
சோனியா காந்தி நளினியின் மனித உரிமை வழக்கறிங்கரிடம்

இந்த வழக்கில் நானோ என் பிள்ளைகளோ யாருக்கும் மரண தண்டனை வழங்குவதை விரும்பவில்லை என்பதை எழுத்து மூலமாக தெரிவித்து உள்ளார் . இவ்வளவு முரண்பாடுகள் இந்த வழக்கில் இருக்கும்போது முன்று பேருக்கு மரணதண்டனை வழகிட அவசரப்படுவது ஏன்?

தமிழக அரசு இந்த மூவரின் உயிரைக் காக முன் வர வேண்டும் .

கேரளாவில் C.A.பாலன் வழக்கில் மரணதண்டனை கருணை மனு குடியரசுத் தலைவர் மறுத்த பிறகும் மாநிலத்தின் 161 பிரிவின் படி மரண தண்டனை ரத்து செய்கிறோம் என்றார் ஈ எம் எஸ் .நீதிபதி கிருஷ்ணய்யர் அவர்களும் மரண தண்டனை வழங்கிட மறுத்தார் .
கொலை செய்தால் தண்டனை வேண்டாம் என்று சொல்ல வில்லை .மரண தண்டனை வேண்டாம் என்றுதான் சொல்கிறேன் .மரண தண்டனை விதிக்கப்பட்ட மாகாளி நாடார் தண்டனை ரத்து செய்த வரலாறு தமிழகதிற்கு உண்டு .
தமிழகத்தில் போர்குற்றவாளி ராஜா பட்ஜெவிற்கு எதிராக எழுந்த தமிழ் இன உணர்வு அலையை திசைத் திருப்ப மூவரின் உயிரோடு விளையாடுகின்றனர் .மூவரின் உயிர்கள் காக்கப் பட வேண்டும் ,
காக்க வேண்டியது மனிதநேய ஆர்வலர்களின் கடமை .

கருத்துகள்