கவிதை அல்ல விதை,நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி

கவிதை அல்ல விதை

கவிதை அல்ல விதை,நூல் ஆசிரியர் : கவிஞர்

இரா.இரவி

*நூல் விமர்சனம்: ரா.பரிமளாதேவி*

என்னுரையில் எழுதியிருக்கும் கவிஞரின் வரிகள் “*கவிதைகளை வாசியுங்கள் உங்கள்
சிந்தனையில் சிறு பொறி தட்டினால் அது தான் இந்த நூலின் வெற்றி”*

இப்படி ஆரம்பித்திலேயே முத்தாய்ப்பான வரிகள் இந்நூலை மேலும் சிறப்பிக்கிறது.

*“உலகப் பொது மறை”* எனும் கவிதையில் எல்லா சிறப்புகளையும் உள்ளடங்கியது.
தி;ருக்குறள் என்பதை ஒரு வரியில் இப்படிச் சொல்கிறார் நம் கவிஞர்.

*“குறளுக்கு இணையான நூல் வேறில்லை “*என்று மேலும்” தமிழின் இமயம் திருவள்ளுவர்
” என்று அவருக்கு நிகர் அவரே… என்று வான்புகழோடு சிறப்பிக்கிறார் கவிஞர்

*“தமிழா”* என்ற கவிதை தமிழ் பகைவர்களை தவிடுபொடியாக்கிடுவோம். என்று தமிழனுக்கு
வரவேண்டிய கோபத்தை வெளிப்படுத்துகிறார்.

*“பாரதி இன்று இருந்திருந்தால்”* எனும் கவிதையில் மூடத்தனத்திற்கு
முற்றுப்புள்ளி வைக்க இவரே இன்னொரு பாரதியாகப் புறப்பட்டு விட்டாரோ? என்று
எண்ணத் தோன்றுகிறது.

*“அன்றும் இன்றும்”*
காடுகளை அழித்து வீடுகளாய் உருமாறியதை சாடும் விதம் அருமை.

*“முக்காலமும் போற்றும் ஒரே முதல்வ**ர்”* *காமராசர்”*

*“காமராசர்” *இறந்தபின்னும் வாழும் “மாமனிதர்” என்பதை ஒரு வரியில் முடித்து
விட்டார் நமது கவிஞர்.

*“அன்னை தெரசா” *எல்லோரும் பரிசு கொடுத்து கௌரவிப்பார்கள். நமது கவிஞர் மட்டும்
பரிசுக்கு கௌரவம் கொடுத்துள்ளார். “தெரசாவிற்கு” பரிசு கொடுத்ததனால் இப்படி ஒரு
கௌரவமாய் “பரிசிற்கு” வித்தியாசமான சிந்தனைதான்.

*“கண்ணதாசன்”* கண்ணதாசனின் சிறப்புக்களைக் கவிதை வடித்த விதத்தில் நமது
கவிஞரும் ஒரு “கவிச் சிற்பி” எனலாம்.

*“கல்யாணசுந்தரம்”* சிறந்த எழுத்தின் வீச்சு என்பது உலகத்தின் எல்லை வரை
சென்றடையும் என்பதற்கு (இவரை) இதை விட உதாரணம் வேறு வேண்டுமா? கவிஞரே……” சுரதா”
தரணி உள்ளவரை தமிழ் மொழி இருக்கும். தமிழ் மொழி உள்ளவரை “சுரதா” புகழ்
நிலைக்கும் என்ற வரிகள் தங்கத்தில் வைரம் பதித்தது போல்
இருந்தது.”வல்லிக்கண்ணன்” உலகம் உள்ளவரை இலக்கியம் இருக்கும், இலக்கியம்
உள்ளவரை இலக்கிய ஞானியின் புகழ் நிலைக்கும் இதைவிட சிறப்பிக்க வேறு வார்த்தைகள்
இல்லை எனலாம்.

*“அப்துல்கலாம்” *ஏவுகணைச் சிற்பியை ஏற்றமிகு வார்த்தைகளால் வாழ்த்திய விதம்
அற்புதம்.

*“போதும்” *தன்னம்பிக்கை இழந்தவர்கள் தன்னை மேம்படுத்திக் கொள்ள “சோகத்துக்கு
முடிவுரை எழுதிடு தமிழா சுகராகத்துக்கு முன்னுரை எழுதிடு தமிழா” இந்த வரிகளைப்
படித்தால் போதும்.

*“மொழி” *ஆங்கிலேயர்கள் நமக்கு சுதந்திரம் கொடுத்து விட்டாலும்,அவர்களின்
“மொழிக்கு” நாம் இன்று வரை அடிமைகளாய் இருக்கிறோம்,என்பதை சுட்டி காட்டிய விதம்
அருமை.

*“விழித்தெழு”* வரதட்சனை, பெண் சிசு கொலை, பெண்ணடிமை, மூட நம்பிக்கை, இப்படி
எல்லா வடிவங்களிலும் ஆணாதிக்கம் மேலோங்கி நிற்கும் போது,பெண்களுக்காக பரிந்து
பேசும் “ஆண்” என்பதை விட சக உயிரையும் மதிக்கும் மாண்பு கொண்டவர். நமது கவிஞர்
என்பதில் பெருமிதமாக உள்ளது.

*“புதுயுகத் தமிழர்”* இன்று புதிதாய்ப் பிறந்தோம்” என்ற பாரதியின் வரிகளைப்
பிரதிபலிப்பதைப் போல் நடந்தவை,நடந்தவைகாளக இருக்கட்டும்,இனி நடப்பகைவள்
நன்மைகளாக அமையட்டும். என்ற “பிளாட்டின” வரிகள் மிகச் சிறப்பு.

*“கொள், கொல்லாதே” *நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் தீர்க்க வேண்டியிருக்கும்
போது,கேளிக்கைகளும் முக்கியத்துவம் அளிக்கும் மக்கட்பதரை என்ன செய்வது? என்பது
போல கவிஞரின் வரிகள் வெளிப்படுத்துகிறது. இப்படி *” அபிமான நடிகரின் புதுப்படம்
அறிவிப்பு வந்தால் போதும்”*

*” மனிதா திருந்தி விடு”* சாதிமதம் இப்படி எதுமில்லை என்பதை *“பெரியார்” *பாசையில்
“உன்னையும்,என்னையும் உரித்தாலே வெங்காயம்” என்கிறார் நமது கவிஞர்.

*” ஓ இளைஞனே” *ஓடாத கடிகாரமும், உழைக்காத மனிதனும் இருந்து பயனில்லை, என
சொல்லாமல் சொல்லும் கவிஞரின் வரிகளுக்கு வலிமை கூடுகிறது.

*“தாளம் வானொலி”* கவிஞரின் (தாளத்தின்) ஊடகத்தின் சிறப்பை சிறப்பாய் சொல்லும்
பாங்கு. நம் கவிஞருக்கு கை வந்த கலையோ?!

*“தமிழா உன் வலிமை நீ அறியவில்லை” *தமிழனுக்குள் இருக்கும் உணர்வுகளை தட்டி,
எழுப்பிக் கேட்கிறாரோ? நமது கவி உன் வலிமை நீ அறியவே இல்லையா? என.”மரம்”
தாவரங்களே இவ்வையகத்தின் உயிர்நாடி என்பதை உயர்த்தி இப்படி ஒரு கேள்வியை நம்
முன் வைக்கிறார்.மானிடனே நீ பெரிதா? மரம் பெரிதா? ” நிலவு” கவிஞருக்கு என்ன
கோபமோ? பாவையரை பால் நிலாவுடன் ஒப்பிடக் கூடாதென்கிறார்.

மகாகவி பாரதி” மகாகவிக்கு மகுடம் சூட்டியது கவிஞரின் உயர்வை (கா)கூட்டுகிறது.

*“பாரதி கனவு பொய்ந்தது” *பெண்களுக்காக ஒரு ஆண் பரிந்து பேசுவது (எழுதுவது)
மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.

*“பாரதிதாசன்”* போர்முரசு,கவிப்பேரரசு,பாட்டுச்சித்தர் என்று*“புரட்சிக்கவிஞரை”
* பாராட்டிய விதம் அற்புதம்*.”நேதாஜி” *சேர்ந்து இருந்த இந்தியனுக்கு ”
சுறுசுறுப்பையும், சுயமரியாதையையும் சொல்லித்தந்த “வங்கத்து சிங்கம் நீ” என்ற
வரிகளும் இறந்துவிட்டாய் என்றும்,இருக்கின்றாய் என்றும் இறப்பில்லை என்பதை
உணராதவர்கள் எனும் வரிகள் இந்தியர்கள் சுறுசுறுப்பையும் சுயமரியாதையையும்
இழக்கமாட்டார்கள்.

தலைவனைப்போல் தொண்டர்களும் சரித்திரம் படைப்பார்கள்.

அதற்கு இந்தக்கவிதை ஒரு நல்ல முன்னுதாரணம் மொத்தத்தில் மூளைச்சோம்பேறிகளை தட்டி
எழுப்பிய விதம் அருமை.

*“பெரியார்*” நீ உன் நண்பனைக்காட்டு நீ எப்படிப்பட்டவன் என்;று தெரிந்து
கொள்கிறேன். என்று சொல்வார்கள். அதைப்போல் நமது கவிஞர் தேர்ந்தெடுத்த முன்னோடி’
நல்ல பகுத்தறிவாளர்.இவரின் அடியொற்றி வந்ததனால் தாங்களும்”மிகச்சிறப்பானவை”
என்பதில் எந்ந ஐயமும் இல்லை எனலாம்.

கருத்துகள்