ஞாயிறு, 18 ஜூலை, 2010

சிந்தனையாளர் கன்பூசியஸ்,நூல் விமர்சனம்: கவிஞர் இரா.ரவி

era.JPG
சிந்தனையாளர் கன்பூசியஸ்,நூல் விமர்சனம்: கவிஞர் இரா.ரவி



நூல் ஆசிரியர் : கோமேதக வேலு



சிறந்த சிந்தனையாளர் கன்பூசியஸ் பற்றி நிறைய கேள்விப்பட்டு இருக்கிறோம். அவருடைய வரலாற்றை,சிந்தனைகளை,பொன்மொழிகளை அறிந்து கொள்ள உதவிடும் அரிய நூல்.நூல் ஆசிரியர் கோமேதகம் போன்ற விலை உயர்ந்த பொருளை பெயரிலேயே பெற்று இருப்பதால் உயர்ந்த பல கருத்துக்களை நூல் ஆசிரியர் கோமேதக வேலு மிக நுட்பமாக,சிறப்பாக எழுதி உள்ளார். சீன அறிஞரை அழகு தமிழில் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

அறநெறி வழியே உலக சமுதாயத்தில் தனி மனிதனாகவும், பொது மனிதனாகவும் வாழ்வது எப்படி? எனச் சிந்தித்தவர் சிந்தனையாளர் கன்பூசியஸ். திருவள்ளுவர்,விவேகானந்தர்,டார்வின்,கார்ல்மார்க்ஸ்,அரிஸ்டாடில்,டால்ஸ்டாய்,ப்ராய்டு,சாக்ரடீஸ் போன்ற சிறந்த சிந்தனையாளர்களின் வரிசையில் குறிப்பிடத் தகுந்த இடம் பிடித்த அறிஞர் கன்பூசியஸ்.

கிறிஸ்து பிறப்பதற்கு 550 ஆண்டுகளுக்கு முன் சீன நாட்டின் வடகிழக்கில்,”ஷன்துங்” என்து இப்போது வழங்கப்படும் மலைப்பிரதேசத்தில் “லூ” அரசாட்சியின் கீழ் அடங்கியிருந்த “ட்சூப்வு” பட்டினத்திலே ஒரு பிரபு குடும்பத்திலே கன்பூசியஸ் பிறந்தார். இவரை “குங்-பப்யூ-டெஸ்” எனக் கூறுவார்கள்.

கன்பூசியசின் தந்தை சூ-லியங்-கே அப்பட்டினத்தின் அதிகாரியாக இருந்தவர். நெஞ்சரம் வாய்த மாவீரர். கன்பூசியஸ் குழந்தையாக இருக்கும் போதே தந்தை இறந்து விட்டதால்,வறுமையாலும்,தாயாரின் கண்டிப்பிலும் தான் அவர் வளர வேண்டியிருந்தது. ஆறு வயது சிறுவனாக இருக்கும் போதே நம் குழந்தைகள் அப்பா அம்ம விளையாட்டு விளையாடுவது போல்,அவர் சிறுவர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு,ஞானிகள் விளையாட்டு விளையாடுவாராம். துமது இருபத்திரண்டாவது வயதில் கலைக்கழகம் என்ற பள்ளியைத் தம் சொந்த ஊரிலே துவக்கினார். நாட்கள் செல்லச் செல்ல கன்பூசியசின் கல்வி பயிற்றுவிக்கும் திறமை நாடெங்கும் பரவியது. ஆவர் புராதன நீதிகளை ஆழ்ந்து படித்தார். இப்படி கன்பூசியசின் வாழ்க்கை நிகழ்வுகள் நூலில் விரிவாக உள்ளது.

நம் திருவள்ளுவரைப் போல், கன்பூசியஸ் அறநெறியாளர்,அதோடு இராஜதந்திரியாக அனுபவபம் பெற்றவர்,குருகுல மகான், கல்வி கற்பிக்கும் ஆசிரியர்,பழம்நூல்களை தொகுக்கும் பதிப்பாசிரியர்,சீடர்களோடு நடமாடும் ஒரு பல்கலைக்கழகம்,கவிஞர், இசைப்படகர்,சங்கீத மேதை,அரசியல்வாதி,இயற்கைவாதி,இலட்சியவாதி,காரியவாதி,தத்துவ ஞானி,வாழ்க்கைப் போராட்டத்தில் நாடோடி இத்தனை சிறப்பியல்புகளும் ஒருங்கே வாய்ந்த பன்முக ஆற்றலாளர். சுPன நாட்டின் மாபெரும் ஞானி மட்டுமல்ல,உலகம் முழுவதற்குமே பொதுவான ஒரு தத்துவஞானி. ஆவரது கருத்துக்கள் நடைமுறை வாழ்வில் சாதாரண மனிதனும் பின்பற்றக்கூடியவை தான்.

அரசியல் பற்றி கன்பூசியசின் கருத்துக்கள் “ஆள்வோர் தவறிழைக்கும் போது ஆளும் உரிமையை இழந்து விடுவர்?”

ஒரு நல்ல அரசாங்கத்திற்கு அத்தியாவசியமானவை மூன்று, ஏராளமான உணவு,போதுமான படை பலம்,பொதுமக்களின் நம்பிக்கை, இவற்றில் பொதுமக்களின் நம்பிக்கை தான் மிக முக்கியமானது. ஆது இல்லாவிட்டால் அரசாங்கம் இராது. இன்று மின்தடை காரணமாக அரசாங்கத்தின் மீது பொதுமக்கள் வெறுப்படைந்து வருகின்றனர் என்பதை ஆள்வோர் உணரவேண்டும்.

காய்ந்து போன பழங்களை ஆசிரியர் கட்டணமாக கொண்டு வந்து கொடுத்தாலும் அவர் கல்வி கற்பிக்கத் தயங்க மாட்டார். ஆனால் படிப்பில் ஆர்வமில்லாதவர்களுக்கோ சுயமாகச் சிந்திக்கும் ஆர்வமில்லாமவர்களுக்கோ,அவர் கல்வி கற்பிக்க மாட்டார். கற்பித்தல் முறை என்பது மாணவனின் தலைக்குள் அறிவுகளைத் திணிப்பது அல்ல. அவன் சுயமாகச் சிந்திப்பது தான் அறிவு. இந்தக் கருத்தை இன்றைய ஆங்கிலப் பள்ளியினர் கருத்தில் கொள்ள வேண்டும். 10ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற நெல்லை ஜாஸ்மி;ன் மாநகராட்சி பள்ளியில் பயின்றார். உணர்ந்து அறிந்து படித்ததால் வென்றார். குழந்தைகளை சுயமாக சிந்திக்க வைக்கும் ஆற்றல் தாய்தொழிக்கே உண்டு.

வருடங்களின் புள்ளி விபரங்களுடன் சிந்தனையாளர் கான்பூசியஸ் பற்றி நூல் ஆசிரியர் கோமேதக வேலு தமிழில் அறியப்படாத கன்பூசியசின் வரலாற்றை,சிந்தனைகளை மிக எளிய நடையில் மிக நுட்பமாகவும்,சிறப்பாகவும் வழங்கி உள்ளார். பாராட்டுக்கள்.

அறிஞர் கன்பூசியஸ் பொன்மொழிகள்:

உங்கள் பலத்தில் பெருமை கொள்ளாதீர்கள்: உங்களை விட பலசாலி ஒருவன் இருக்கிறான் என்பதைப் பற்றி மட்டும் மறந்து விடாதீர்கள். (இக்கருத்தை சிங்களப்படை உணர வேண்டும்)

அரசன் தனி நல்லொழுக்கத்தால் செங்கோல் செலுத்தும் போது துரவ நட்சத்திரம் போல் விளங்குகிறான். அந்த நட்சத்திரம் சலனமற்று நடுநிலையிலிருக்க மற்ற நட்சத்திரங்கள் அனைத்தும் அதைச் சுற்றி வருகின்றன. (இக்கருத்தை ஆள்வோர் உணர வேண்டும்)

தெரிந்தது இன்னது என்பதை அறிவதும்

தெரியாதது அன்பு காட்டுவது தான் உதவி, அனைவரிடத்தும் அன்பு செலுத்துங்கள். நல்லவர்களின் நடப்பை நாடுங்கள். (இக்கருத்தை சிங்கள இன வெறியர் ராஜபக்சே உணர வேண்டும்)

தான் கற்றதை மறவாமல் இருப்பதும்,மேலும் சகல விஷயங்களையும் கற்று வருவதும் தான் ஆசானுக்கு அழகு. (இக்கருத்தை இன்றைய ஆசிரியர்கள் உணரவேண்டும்.)

இன்பத்தையும், ஓய்வையும் தேடி அலையாதீர்கள். அவ்வாறு அவற்றை அடைந்தால் அவை நிச்சயமாக நம் கைப்பிடிக்கு அகப்படா. (இக்கருத்தை இன்றைய இளைஞர்கள் உணரவேண்டும்.)

ஏழைகளையும் துன்புறுவோர்களையும் நினைவில் வைத்து அவர்களுக்கு உரியன செய்தல் வேண்டும். இவ்வாறு செய்வது நல்ல அரசாட்சிக்கு இன்றியமையாதது.(இக்கருத்தை ஆள்வோர் உடன் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.)

கன்பூசியசின் அறிவார்ந்த கருத்துக்களின் சுரங்கமாக, பெட்டகமாக நூல் உள்ளது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக