தந்தை பெரியார் ஹைக்கூ – கவிஞர் இரா.இரவி
அறிவு பூட்டின்
திறவுகோல்
பெரியார்
எதையும் ஏன்? ஏதற்கு? எப்படி?
என்று கேட்க வைத்தவர்
பெரியார்
பிள்ளை பெறும் இயந்திரமா?
பெண்கள் என்று கேட்டவர்
பெரியார்
கற்பிக்கப்பட்ட கற்பனை கடவுள்
என்பதை உணர்த்தியவர்
பெரியார்
அடித்து நொறுக்கினார்
அடிமை விலங்கை
பெரியார்
அறிஞர் அண்ணா என்ற
ஆலமரத்தின் விதை
பெரியார்
ஒடுக்கப்பட்டவர்களுக்கு கல்வியும் பதவியும்
கிடைத்திடக் காரணமானவர்
பெரியார்
பெண் இனத்தின்
போர்முரசு விடிவெள்ளி
பெரியார்
மூடநம்பிக்கை ஒழித்து
தன்னம்பிக்கை விதைத்தவர்
பெரியார்
சமூக நீதியாம் இடஒதுக்கீட்டை
சாதித்துக் காட்டியவர்
பெரியார்
“மனிதனை நினை” என்று
மனிதனுக்கு நினைவூட்டியவர்
பெரியார்
தமிழருக்கு தன்மானம்
கற்பித்த ஆசான்
பெரியார்
தள்ளாத வயதிலும்
தளராத தேனீ
பெரியார்
இறுதி மூச்சு வரை
கொள்கையை மூச்சாகக் கொண்டவர்
பெரியார்
கருத்துகள்
கருத்துரையிடுக