தமிழா சிந்திப்பாயா? கவிஞர்:இரா.இரவி

அடுத்த வீட்டில்தானே தீ என்று இருந்தால்
அந்தத் தீ உன்னையும் அழிக்கும்.
ஈழத்தில்தானே படுகொலை என்று
வேடிக்கைப் பார்த்தாய்.
தமிழ்நாட்டுத் தமிழனையும்
படுகொலை செய்கிறது சிங்களப்படை.
உலகில் தமிழன் உயிர்
மிக மலிவாகிப் போனது.
கேட்க நாதியற்ற
இனமாகிப் போனது.
தமிழக முதல்வர் கடிதம் எழுதுவார்
இந்திய அரசு பதில் தராது.
இனி அடுத்த படுகொலைக்கும்
தமிழக முதல்வர் கடிதம் எழுதுவார்.
இமயம் முதல் குமரி வரை இந்தியா
இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தோர்
தமிழ்நாட்டுத் தமிழர்கள்
குழந்தைக்கு சொல்லித்தருகிறோம்.
இந்திய அரசு மட்டும்
தமிழனை இந்தியனாக்கக் கருதாமல்
தமிழனாகக் கருதுகின்றது
தமிழின விரோதி வந்தால்
சிகப்புக் கம்பள வரவேற்ப்புத் தந்து
கோடிகளை அள்ளிக் கொடுக்கின்றது.
கருத்துகள்
கருத்துரையிடுக